redmi k20 pro

சியோமி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் ரெட்மி K20 மற்றும் ரெட்மி K20 ப்ரோ என இரு மொபைல் மாடல்கள் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜூலை 22 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் , மீ ஹோம் மற்றும் Mi.com இணையதளத்தில் விற்பனைக்கு பகல் 12.00 மணிக்கு கிடைக்க உள்ளது.

இந்திய சந்தையில் சியோமியின் ஐந்தாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் புதுதில்லியில் நடந்த நிகழ்ச்சியில் இந்த ஸ்மார்ட்போன்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. சியோமி கடந்த மாதம் சீனாவில் ரெட்மி கே 20 சீரிஸை அறிமுகப்படுத்தியது.

Redmi K20 மற்றும் Redmi K20 Pro, என இரு மொபைல்களும் 6.39 அங்குல திரையை பெற்று OLED முழு HD+ அம்சத்துடன் பாப் அப் முறையில் எழும்பும் செல்ஃபி கேமரா ஆப்ஷனில் 20 மெகாபிக்சல் கேமரா சென்சார் இணைக்கப்பட்டுள்ளது. இந்த மொபைலில் பொதுவாக டிரிப்ள் கேமரா ஆப்ஷனுடன் வந்துள்ளது. குறிப்பாக ரெட்மி கே20 ப்ரோ போனில் 48எம்பி கேமரா சோனி IMX586 சென்சாரும், கே20  ப்ரோ மாடலில் 48 மெகாபிக்சல் கேமராவுக்கு சோனி IMX582 சென்சார் வழங்கப்பட்டுள்ளது. மற்ற அல்ட்ரா வைட் ஏங்கிள் 13 எம்பி சென்சார் மற்றும் 8 எம்பி சென்சார் என இரண்டு கேமரா வழங்கப்பட்டுள்ளது.

redmi k20 pro

ரெட்மி K20 மற்றும் K20 Pro என இரு மாடல்களும் 4,000 mAh பேட்டரி பெற்றிருந்தாலும் ப்ரோ ரக மாடல் 27 வாட்ஸ் ஃபாஸ்ட் சோனிக் சார்ஜிங் ஆதரவு மற்றும் கே20 மாடல் 18 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியை பெற்றுள்ளது.

குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் கொண்டதாக கே20 ப்ரோ மாடலில் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் உடன் 64 ஜிபி அல்லது 128 ஜிபி மெமரி ஆப்ஷனை கொண்டிருக்கின்றது. கே20 மாடல் 730 ஸ்னாப்டிராகன் சிப்செட் உடன் 6ஜிபி அல்லது 8ஜிபி ரேம் உடன் 128 ஜிபி அல்லது 256 ஜிபி மெமரி கொண்டிருக்கின்றது.

சியோமி ரெட்மி K20, ரெட்மி K20 ப்ரோ

ரெட்மி கே20 மாடல் 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்டின் விலை ரூ .21,999 எனவும், 128 ஜிபி ஸ்டோரேஜ் உடன் 6ஜிபி ரேம் வேரியண்டின் விலை ரூ .23,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அடுத்து, ரெட்மி கே20 ப்ரோ இரண்டு சேமிப்பு விருப்பங்களில் வருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ .27,999 மற்றும் 8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ. 30,999 மட்டுமே.

இரண்டு சாதனங்களும் ஜூலை 22 முதல் மதியம் 12:00 மணி முதல் பிளிப்கார்ட், மி.காம் மற்றும் மி ஸ்டோர் வழியாக கிடைக்கும். கூடுதலாக 27W சோனிக்சார்ஜ் அடாப்டர் ரூ .999 விற்பனைக்கு கிடைக்கும்.

redmi k20