இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன் மாடலாக விளங்கும் சியோமி ரெட்மி நோட் 4 விலை ரூ.1000 வரை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு நிரந்தரமாக வழங்கப்பட உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 4

இந்தியர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்துள்ள சியோமி ரெட்மி நோட் 4 மொபைல் பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டிருப்பதுடன் மிகவும் சவாலான விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், அதிரடியாக ரூ.1000 விலை குறைக்கப்படுவதாக இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆரம்பகட்டத்தில் 2ஜிபி, 3ஜிபி மற்றும் 4ஜிபி ஆகிய ரேம்களில் கிடைக்க தொடங்கிய இந்த போன் தற்போது 3ஜிபி மற்றும் 4ஜிபி ஆகிய இரண்டிலும் கிடைத்து வருகின்றது. எனினும் 2 ஜி.பி ரேம் வகையானது நிறுத்தப்பட்டது.

நௌகட் 7.0 இயங்குதளத்தினை அடிப்படையாக கொண்ட MIUI 9 இயங்குதளத்தில் செயல்படுகின்றது.  5.5 இன்ச் முழு ஹெச்டி திடையுடன்  (1080p) 2.5 D கிளாஸ் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 சிப்செட் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கேமரா வசதி

உயர்தரமான படங்களை வெளிப்படுத்தும் 13 மெகாபிக்சல் ரியர் கேமராவில் CMOS சென்சார் எல்இடி பிளாஷ் ,  f/2.0 அப்ரேச்சர் , PDAF ஆதரவுடன் விளங்கும். முன்பக்க கேமரா 5 மெகாபிக்சல்  கேமராவிலும் CMOS சென்சாரை பெற்றுள்ளது.

3 ஜிபி ரேம் மாடல்

 • ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953
 • Adreno 506 GPU
 • 3 GB RAM
 • ஆண்ட்ராய்ட் 7.0
 • 5.5 இன்ச் 1080p display
 • 32 GB internal storage
 • 13 MP பின்புற கேமரா
 • 5 MP முன்பக்க கேமரா
 • 128ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
 • விலை – ரூ.9,999

4 ஜிபி ரேம் மாடல்

 • ஸ்னாப்டிராகன் குவால்காம் 625 MSM8953
 • Adreno 506 GPU
 • 4 GB RAM
 • ஆண்ட்ராய்ட் 67.0
 • 5.5 இன்ச் 1080p display
 • 64 GB internal storage
 • 13 MP பின்புற கேமரா
 • 5 MP முன்பக்க கேமரா
 • 128ஜிபி மைக்ரோ எஸ்டிகார்டு
 • விலை – ரூ.11,999