சியோமி ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்நாளுக்கு நாள் இந்தியாவில் அதிகரித்து வரும் ஸ்மார்ட்போன் விற்பனையில் மிக சவாலான விலை மற்றும் அதிகபட்ச வசதிகளை வழங்குவதில் முன்னணி வகிக்கும் சியோமி நிறுவனம், இந்தியாவில் சியோமி ரெட்மி நோட் 5, சியோமி ரெட்மி நோட் 5 புரோ மற்றும் Mi TV4 ஆகிய மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 புரோ

இந்தியாவில் மிக பரபரப்பாக விற்பனை ஆகி வந்த ரெட்மி நோட் 4 வெற்றியை தொடர்ந்து வெளியிடப்பட்டுள்ள ரெட்மி நோட் 5 மற்றும் நோட் 5 புரோ ஆகிய ஸ்மார்ட்போன்கள் மிக சவாலான விலையில் அமைந்துள்ளது.

ரெட்மி நோட் 5 மொபைல் போன் ரூ. 9,999 ஆரம்ப விலையில், 3ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி சேமிப்பு திறன் கொண்டதாக உள்ளது. ரூ. 11,999 விலையில், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு திறனுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு மற்றும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 625 பிராசஸர் சிப்செட் கொண்டு இயங்குப்படுகின்ற மொபைல் போன் 5.99 அங்குல முழு ஹெச்டி திரையை பெற்றுள்ளது.

இரட்டை சிம் கார்டு ஆதரவுடன் கூடிய கைரேகை சென்சாரை பின்புறம் உள்ள பேனலில் பெற்றுள்ள இந்த மொபைல் போனில் f/2.2, a 1.25-micron pixel size, PDAF, EIS உட்பட எல்இடி ஃபிளாஷ் பெற்ற 12 மெகாபிகசல் சென்சாருடன், முன்புறத்தில் செல்பி படங்கள் , வீடியோ அழைப்பினை எதிர்கொள்ள ஏற்ற வகையில் எல்இடி செல்பி லைட் பெற்ற 12 மெகாபிகசல் சென்சார் கேமராக வழங்கப்பட்டுள்ளது.

ரெட்மி நோட் 5 மாடல் கருப்பு, கோல்டு, நீலம், மற்றும் ரோஸ் கோல்டு ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

சியோமி ரெட்மி நோட் 5, ரெட்மி நோட் 5 புரோ ஸ்மார்ட்போன்கள் அறிமுகம்

ரெட்மி நோட் 5 புரோ

ரெட்மி நோட் 5 புரோ மொபைல் போன் ரூ. 13,999 ஆரம்ப விலையில், 4ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு திறன் கொண்டதாக உள்ளது. ரூ. 16,999 விலையில், 6ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி சேமிப்பு திறனுடனும் வடிவமைக்கப்பட்டுள்ளது. 4000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு மற்றும் குவால்காம் ஸ்நாப்டிராகன் 636 பிராசஸர் சிப்செட் கொண்டு இயங்குப்படுகின்ற மொபைல் போன் 5.99 அங்குல முழு ஹெச்டி திரையை பெற்றுள்ளது.

இரட்டை சிம் கார்டு ஆதரவுடன் கூடிய கைரேகை சென்சாரை பின்புறம் உள்ள பேனலில் பெற்றுள்ள ரெட்மி நோட் 5 புரோ ஸ்மார்ட் போன், 12 எம்பி மற்றும் 5 எம்பி கேமரா டூயல் ரியர் கேமரா கொண்டது. 20எம்பி சோனி IMX376 செல்பி எல்இடி ஃபிளாஷ் வசதிகளும் கொண்டது, அதுபோலவே சியோமி ஸ்மார்ட் போன்களில் முதன்முறையாக ‘பேஸ் அன்லாக்’ வசதி மாரச் மாத மத்தியில் வழங்கப்பட உள்ளது.

ரெட்மி நோட் 5 புரோ மாடல் கருப்பு, கோல்டு, நீலம், மற்றும் ரோஸ் கோல்டு ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

இரு மொபைல்களும் இணைப்பு விருப்பங்களாக 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n, புளூடூத், 3.5mm ஹெட்போன் ஜாக், மற்றும் மைக்ரோ யூஎஸ்பி பெற்றிருக்கும்.

விற்பனை விபரம்

வருகின்ற பிப்ரவரி 22, 2018 அன்றைக்கு பகல் 12 மணிக்கு ஃபிளிப்கார்ட், மீ ஹோம் Mi.com ஆகியவற்றில் விற்பனைக்கு கிடைக்க தொடங்க உள்ளது.

இந்தியாவில் ஆன்லைன் வாயிலாக விற்பனை செய்யப்படுகின்ற மொபைல் போன் விற்பனையில், சியோமி நிறுவன பங்கு 57 சதவீதமாகும். கடைகளில் அதிகம் விற்பனையாகும் மொபைல் போன்களிலும், இரண்டாவது இடத்தில்  இந்நிறுவனம் உள்ளது

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here