4 கேமரா மற்றும் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

சீனாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஜியோமி தனது மிட் – ரேஞ் போனான ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவை தாய்லாந்தில் அறிமுகப்படுத்த உள்ளது. ரெட்மி நோட் 5 ப்ரோ வெற்றியை தொடர்ந்து அதன் அப்கிரேடாக ரெட்மி நோட் 6 ப்ரோ அறிமுகமாக உள்ளது. டூயல் செல்பி கேமரா, 19:9 நாட்ச் டிஸ்பிளே, அப்கிரேட் செய்யப்பட்ட பின்பக்க கேமரா சென்சார்கள் உள்ளிட்ட அம்சங்களுடன் வெளிவருகிறது.

எனினும், ரெட்மி நோட் 6 ப்ரோவில் முந்தைய மாடலான நோட் 5 ப்ரோவில் பயன்படுத்தப்பட்ட அதே ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் தான் இதில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேலும், ரெட்மி நோட் 6 ப்ரோ குறித்து ஜியோமி நிறுவனம், சீன உட்பட எந்த முன்னனி சந்தையிலும் இதுவரை தனது அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடவில்லை. ஆனால் தனது எம்ஐ ஃபோரத்தில் மட்டும் நோட் 6 ப்ரோ குறித்த தகவல்களை வெளியிட்டுள்ளது.

4 கேமரா மற்றும் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ விலை?
ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ, 4ஜிபி ரேம்/ 64ஜிபி மெமரி வகை போனின் இந்திய விலையானது ரூ.15,700 (தாய்லாந்த் விலையின்படி) இருக்கும் என தெரிகிறது. மற்ற மாடல்களின் விலை குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ போனை, பிளாக், புளு, ரோஸ் கோல்டு உள்ளிட்ட நிறங்களில் தாய்லாந்த் இ-காமர்ஸ் வெப்சைட்களில் வரும் செப்.27ஆம் தேதி முதல் செப்.30ஆம் தேதி வரை பெற்றுக்கொள்ளலாம்.

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ சிறப்பம்சங்கள்
புதிதாக வெளிவர இருக்கும் ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோவில், 6.26 இன்ச் எச்டி + ஐபிஎஸ் எல்சிடியுடன் கூடிய 19:9 நாட்ச் டிஸ்பிளே ஸ்கிரின் பேனல், கார்னரிங் கொரில்லா க்ளாஸ் பாதுகாப்புடன் வருகிறது. மேலும், 14 என்எம் ஆக்டோ-கோர் குவல்காம் ஸ்னாப்டிராகன் 636 பிராசஸர் அட்ரினோ ஜிபியூடன் 4ஜிபி ரேம் 64ஜிபி மெமரியுடன் வருகிறது.

4 கேமரா மற்றும் நாட்ச் டிஸ்பிளேயுடன் வெளியாகிறது ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ

ஜியோமி ரெட்மி நோட் 6 ப்ரோ கேமராவை பெருத்தவரையில், பின்பக்கம் டூயல் கேமராவில் 12-மெகா பிக்செல் ப்ரைமரி சென்சார் கேமரா, 5 மெகா பிக்செல் சென்சாருடன் ஆட்டோ ஃபோகஸ் 1.4 மைக்ரான் பிக்செலஸ் கேமராவையும் கொண்டுள்ளது. முன்பக்கம் டூயல் கேமராவில் 20-மெகா பிக்செல் ப்ரைமரி சென்சார் கேமரா, ஏஐ பேஸ்லாக்குடன் 2-மெகா பிக்செல் சகண்ட்ரி கேமராவும் கொண்டுள்ளது. பேட்டரியை பொறுத்தவரையில் முந்தைய மாடலில் இருந்தது போல் 4,000mah திறன்கொண்ட பேட்டரியே இதிலும் உள்ளது. இதை ஒருமுறை முழு சார்ஜ் செய்தால் 2 நாட்கள் வரை நீடிக்கும் திறன்கொண்டுள்ளது.