இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ

சீனாவை சேர்ந்த சியோமி எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம், ரெட் மீ நோட் 5 புரோ ஸ்மார்ட் போன்களை சீனா மற்றும் இந்தோனேசியாவில் அறிமுகம் செய்தது. இதேபோன்று ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை தாய்லாந்தில் அறிமுகம் செய்துள்ளது. தற்போது இந்த ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்களை இந்தோனேசியா மற்றும் சீனாவில் அறிமுகம் செய்துள்ளது. சமீபத்தில் வெளியான தகவல்களின் படி, ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன் இந்தியாவில் வரும் 20ம் தேதி அறிமுகம் செய்யப்படும் என்று தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், ஏற்கனவே லீக் ஆன பிரஸ் அழைப்பிதழிலும் இந்த ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்கள் இந்தியா அறிமுகத்தை உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ

ரெட்மீ நோட் 6 புரோ ஸ்மார்ட் போன்கள், 6.26 இன்ச் IPS LCD FHD+ டிஸ்பிளேகளுடன் 2280×1080 பிக்சல் ரெசலுசன் கொண்டதாக இருக்கும். மேலும் இந்த ஸ்மார்ட் போன்கள், கோல்காம் ஸ்நாப்டிராகன் 636 SoC-களுடன் 4GB ரேம் மற்றும் 64GB விரிவு படுத்தக்கூடிய ஸ்டோரேஜ் கொண்டதாக இருக்கும்.

கேமராவை பொறுத்தவரை, பின்புறம் 12MP கேமராவுடன் டூயல் பிக்சல் பேஸ் டிடேக்சன் ஆட்டோபோகஸ் மற்றும் டூயல் டோன் LED பிளாஷ் கொண்டதாக இருக்கும். மேலும் இதில் 5MP ஸ்நாப்பர் கொண்டிருக்கும்.

இந்தியாவில் விரைவில் அறிமுகமாகிறது சியோமி ரெட் மீ நோட் 6 புரோ

MIUI 10 அடிப்படையிலான ஆண்டிராய்டு 8.1 ஓரியோ ஆபரேடிங் சிஸ்டமில் இயங்கும் இந்த டிவைஸ் 4000 mAh பேட்டரி கொண்டதாக இருக்கும். மேலும் ஹைபிரிட் சிம் சிலாட்களுடன் பேஸ் அன்-லாக் வசதியும் உள்ளது, மேலும் இது வை-பை, ப்ளூடூத், GPS மற்றும் 4G LTE போன்றவைகளுக்கு சப்போர்ட் செய்வதாக இருக்கும். 3GB ரேம் மற்றும் 32GB ரோம் கொண்ட ஸ்மார்ட் போன்கள் இந்தியமதிப்பில் தொரயாமாக 14,300 ரூபாய் விலையிலும், 4GB ரோம் கொண்ட வகை போன்கள் இந்தியமதிப்பில் தொரயாமாக 16,250 ரூபாய் விலையிலும் கிடைக்கும்.