Redmi note 7 price

சியோமி நிறுவனத்தின் துனை பிராண்டான ரெட்மி நிறுவனத்தின் நோட் 7 (Xiaomi Redmi Note 7) ஸ்மார்ட்போன், இன்றைக்கு நண்பகல் 12 மணி முதல் ரூபாய் 9,999 விலையில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்நிறுவனத்தின் mi, ஃபிளிப்கார்ட் இணையதளம் மற்றும் மீ ஹோம் ஸ்டோர்களில் தொடங்குகிறது.

இந்த போன் மாடலில் டூயல் கேமரா செட்டப் பெற்று மிக விரைவான சார்ஜிங் அம்சத்துடன் கூடிய 4000mAh பேட்டரி பெற்று ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு Redmi Note 7 இயக்கப்படுகின்றது.

Redmi Note 7 சிறப்புகள் மற்றும் வசதிகள்

கேமரா சார்ந்த பிரிவில் செயற்கை அறிவுத்திறன் ( AI beauty) பெற்ற  12 மெகா பிக்சல் மற்றும் 2 மெகா பிக்சல் கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் கொண்டுள்ளது. செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 மெகா பிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

6.3 அங்குல FHD+ வாட்டர் டிராப் டிஸ்பிளே 2340 ×1080 பிக்சல்ஸ் கொண்டுள்ள இந்த போனை இயக்க குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் AI நுட்பத்துடன் வழங்கப்பட்டுள்ளது. இந்த போனில் 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி அடுத்து 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இருவகைகளிலும் உள்ளது.

Redmi note 7 போனில் மிக விரைவாக சார்ஜிங் ஆகின்ற சார்ஜருடன் கூடிய 4000mAh பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. கூடுதல் ஆதரவுகளாக கைரேகை சென்சார், 3.5mm ஆடியோ ஜாக், வை-ஃபை, ப்ளூடூத், 4ஜி எல்டிஇ , USB Type-C மற்றும் GPS + GLONASS போன்றவை கொண்டுள்ளது.

Redmi note 7 price

Redmi Note 7 Price விபரம்

9,999 ரூபாய் விலையில் ரெட்மி நோட் 7 மாடல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி சேமிப்பு வசதி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி சேமிப்பு வசதி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போனின் விலை 11,999 ரூபாய் ஆகும். இந்த மாடல் மார்ச் 6ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

மேலும் படிங்க – Redmi Note 7 Pro ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

Redmi Note 7 Pro Vs Redmi Note 7 வித்தியாசங்கள்

ஆஃபர்

அறிமுக சலுகையாக ஏர்டெல் நிறுவனத்தின் மூலம் டபுள் டேட்டா ஆஃபர் வழங்கப்பட்டுள்ளது. 249 ரூபாய் கட்டணத்திலான பிளானில் 4 ஜிபி டேட்டா மற்றும் 349 ரூபாய் ரீசார்ஜில் 6 ஜிபி டேட்டா என இரு ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களில் சிறப்பு டேட்டா சலுகை வழங்கப்படுகின்றது. 100 சதவீத கூடுதல் டேட்டா நன்மையை அறிவித்துள்ள ஏர்டெல் நிறுவனம், மொத்தமாக 1120 ஜிபி டேட்டா நன்மையை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இரு திட்டங்களிலும் ஏர்டெல் பிரீமியம் டிவி சந்தா இலவசமாக வழங்கப்படுகின்றது. கூடுதல் நன்மைகளாக அன்ட்டி மால்வேர் புராடெக்‌ஷன், ஆப் அட்வைசர், வெப் புராடெக்‌ஷன், ஸ்பேம் பிளாக், அன்ட்டி தெஃப்ட் செக்கியூரிட்டி, மற்றும் தொடர்புகளின் பேக்கப் ஆகியவற்றை வழங்குகின்றது.