குறைந்த விலையில் வந்த ரெட்மி நோட் 7 சிறப்புகள்

சியோமி நிறுவனம் வெளியிட்டுள்ள ரெட்மி நோட் 7 மற்றும் ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள் மற்றும் விலை உள்ளிட்ட விபரங்களை அறிந்து கொள்ளலாம்.

மிக நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று மதியம் வெளியிடப்பட்ட ரெட்மி நோட் 7 மற்றும் முதன்முறையாக சர்வதேச அளவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 7 ப்ரோ மாடல்கள் என இரண்டும் பொதுவாக 6.3 அங்குல டிஸ்பிளே கொண்டு இயக்கப்படுகின்றது.

இரு மாடல்களிலும் ஃபாஸ்ட் சார்ஜிங் நுட்பம் இணைக்கப்பட்டுள்ளது. 4000mAh பேட்டரி கொண்டு செயல்படுகின்றது.  டூயல் சிம் கார்டு ஆப்ஷனுடன், 4ஜி, 3.5mm ஆடியோ ஜாக், உள்ளிட்ட அம்சங்களுடன் ஆண்ட்ராய்டு பை இயங்குதளத்தை பின்பற்றி MIUI 10 ஓஎஸ் கொண்டு செயல்படுகின்றது. பொதுவாக பல்வேறு அம்சங்களை பெற்றிருந்தாலும், இரு மாடல்களும் கேமரா , பிராசெஸர் மற்றும் ரேம் , சேமிப்பு போன்றவற்றில் மாறுபடுகின்றன.

குறைந்த விலையில் வந்த ரெட்மி நோட் 7 சிறப்புகள்

ரெட்மி நோட் 7 ப்ரோ குவால்காம் நிறுவனத்தின் ஸ்னாப்டிராகன் 675 AIE 14nm – ஆக்டா கோர் சிப்செட் பெற்று 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி அடுத்து 6ஜிபி ரேம், 128ஜிபி மெமரி என இரு வகையில் கிடைக்கின்றது.

கேமரா பிரிவில் 48 எம்பி Sony IMX586 மற்றும் 5 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் பெற்று செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேராவிலும் செயற்கை அறிவுத்திறன் இணைக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் வந்த ரெட்மி நோட் 7 சிறப்புகள்

ரெட்மி நோட் 7

ரெட்மி நோட் 7 மாடல் குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் பெற்று 3ஜிபி ரேம், 32ஜிபி மெமரி அடுத்து 4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி என இருவகைகளிலும் உள்ளது. இந்த போனில் சீனா மாடலை போல 48எம்பி கேமரா இடம்பெறவில்லை.

கேமரா பிரிவில் 12 எம்பி மற்றும் 2 எம்பி கேமரா என டூயல் செட்டப்பை பின்புறத்தில் பெற்று செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 13 எம்பி கேமரா வழங்கப்பட்டுள்ளது. இந்த இரு கேராவிலும் செயற்கை அறிவுத்திறன் இணைக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் வந்த ரெட்மி நோட் 7 சிறப்புகள்

ரெட்மி நோட் 7 ப்ரோ மற்றும் ரெட்மி நோட் 7 விலை பட்டியல்

9,999 ரூபாய் விலையில் ரெட்மி நோட் 7 மாடல் 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி கொண்டதாகவும், 4ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி உள்ள நோட் 7 ஸ்மார்ட்போன் 11,999 ரூபாய் ஆகும். இந்த மாடல் மார்ச் 6ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

4ஜிபி ரேம், 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி நோட் 7 ப்ரோ ஸ்மார்ட்போன் விலை 13,999 ரூபாய், 6ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி கொண்ட பதிப்பு 16,999 ரூபாய் என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த மாடல் மார்ச் 13ந் தேதி நண்பகல் 12 மணி முதல் mi இணையதளம் மற்றும் ஃபிளிப்கார்ட்டில் விற்பனைக்கு கிடைக்கும்.

அறிமுக சலுகையாக ஏர்டெல் பயனர்களுக்கு ரூ.349 கட்டணத்தில் ரீசார்ஜ் திட்டத்தை தேர்ந்தெடுத்தால் 1,120 ஜிபி 4ஜி டேட்டா சலுகை வழங்கப்பட உள்ளது. இந்த மொபைல் போன்கள் மேக் இன் இந்தியா திட்டத்தில் இந்தியாவிலே உற்பத்தி செய்யப்படுகின்றது.