ரியல்மி 3 Vs ரெட்மி நோட் 7 : எந்த மொபைல் சிறந்தது

ஸ்மார்ட்போன் சந்தையில் கிடைக்கின்ற சிறந்த மொபைல் போன் மாடலாக விளங்கும் ரியல்மி 3 Vs ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போன்களில் எந்த மொபைல் சிறந்தது என ஒப்பீட்டு அறிந்து கொள்ளலாம். சியோமி ரெட்மி நோட் 7 போனை விட ரூ.1000 குறைந்த விலையில் ரியல்மி 3 போன் விற்பனைக்கு கிடைக்க தொடங்கியுள்ளது.

நோட் 7 மொபைல் போன் மாடலை விட சிறப்பான 13எம்பி கேமரா மற்றும் 2 எம்பி கேமரா சென்சாரை கொண்டதாக ரியல்மி 3 போனில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரு மாடல்களும் ஒன்றுக்கு ஒன்று விட்டுக்கொடுக்க தயாராக இல்லை.

redmi-note-7-pro

ரியல்மி 3 Vs ரெட்மி நோட் 7

இரு ஸ்மார்ட்போன்களும் பொதுவாக டுயல் கேமரா செட்டப், 3 ஜிபி ரேம் மற்றும் 4 ஜிபி ரேம் என இரு விதமான மாடல்களில் விற்பனைக்கு கிடைக்கின்றது. ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தை ரெட்மி நோட் 7 பெற்றுள்ளது.

டிஸ்பிளே

ரெட்மி நோட் 7 ஸ்மார்ட்போனில் 6.3 அங்குல திரையை பெற்று முழு ஹெச்டி பிளஸ் மறும் கொரில்லா கார்னிங் கிளாஸ் 5 அம்சத்தை பெற்றுள்ளது. ஆனால் ரியல்மி 3 மொபைல் போன் 6.2 அங்குல திரையை பெற்று ஹெச்டி பிளஸ் மறும் கொரில்லா கார்னிங் கிளாஸ் 3 அம்சத்தை பெற்றுள்ளது.

Realme 3 mobile

கேமரா

கேமரா பிரிவில் செயற்கை அறிவுத்திறன் இரு மாடல்களிலும் சேர்க்கப்பட்டு 13எம்பி மற்றும் 2 எம்பி சென்சார் என இரண்டையும் ரியல்மி 3 போனும், 12 எம்பி மற்றும் 2 எம்பி சென்சார் என இரண்டையும் ரெட்மி நோட் 7 போன் பெற்றுள்ளது.

செல்பி பிரிவில் இரு மாடல்களும் 13எம்பி சென்சாரை கொண்டுள்ளன.

Realme 3 Vs Redmi Note 7

பிராசெஸர் மற்றும் ரேம் 

ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 9 அடிப்படையாக கொண்ட ரியல்மி 3 போனில் மீடியாடெக் ஹீலியோ பி70 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் 8.1 ஓரியோ அடிப்படையாக கொண்ட ரெட்மி நோட் 7 போனில் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு 3ஜிபி ரேம் மற்றும் 4ஜிபி ரேம் வழங்கப்பட்டுள்ளது.

Realme 3 Vs Redmi Note 7 – வித்தியாசம்
நுட்பம் ரியல்மி 3 ரெட்மி நோட் 7
டிஸ்பிளே 6.2-inch HD+ கொரில்லா கிளாஸ் 3 6.3-inch FHD+ கொரில்லா கிளாஸ் 5
பிராசஸர் 2.1GHz octa-core மீடியாடெக் ஹீலியோ P70 2.2GHz octa-core ஸ்னாப்டிராகன் 660
ரேம் 3GB மற்றும் 4GB ரேம் 3GB மற்றும் 4GB ரேம்
சேமிப்பு 32GB மற்றும் 64GB 32GB மற்றும் 64GB
ரியர் கேமரா 13MP கேமரா & 2 MP கேமரா 12MP கேமரா & 2 MP கேமரா
முன் கேமரா 13MP f/2.0 இன் டிஸ்பிளே ஃபிளாஷ் 13MP f/2.0 இன் டிஸ்பிளே ஃபிளாஷ்
பேட்டரி 4230mAh (Gadgets Tamilan) 4000mAh
ஓஎஸ் ஆண்ட்ராய்டு 9 ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
நிறம் நீலம் மற்றும் கருப்பு சிவப்பு, நீலம் மற்றும் கருப்பு
விலை 3GB+32GB -ரூ.8,999

4GB+64GB – ரூ.10,999

3GB+32GB -ரூ.9,999

4GB+64GB – ரூ.11,999

இரு மாடல்களுக்கும் விலை ரூ.1000 வித்தியாசம் உள்ளது. ஆனால் ரியல்மி 3 மொபைல் போனின் முதலில் வாங்கும் 10 லட்சம் பயனாளர்களுக்கு மட்டும் இந்த விலை வழங்கப்பட உள்ளது. அதன் பிறகு விலை அறிவிக்கப்படும்.

Realme 3 Vs redmi note 7 mobile news