xiaomi-redmi-note-7s-price-india

இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள ரெட்மி நோட் 7S விலை ரூ.10,999 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சீன சந்தையில் வெளியிடப்பட்ட சியோமி ரெட்மி நோட் 7 மாடலை அடிப்பையாக கொண்டதே ரெட்மி நோட் 7எஸ் மாடலாகும்.

சீன சந்தையில் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட நோட் 7 மாடலின் மேம்படுத்தப்பட்டதாகவே இந்த போன் அமைதிருக்கின்றது. இந்தியாவில் மே 23 முதல் ஃபிளிப்கார்ட், Mi.com-ல் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரெட்மி நோட் 7எஸ் சிறப்புகள்

ரெட்மி நோட் 7எஸ் மொபைல்  6.3-inch முழு ஹெச்டி பிளஸ் டிஸ்பிளேவை 2.5D கர்வடு கிளாஸ் பாதுகாப்பை பெற்று இதன் ஆஸ்பெக்ட் விகிதம்19.5:9  மற்றும் 1080p தீர்மானத்தை கொண்டுள்ளது.  நோட் 7 மாடல் நீலம், கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசஸர் & ரேம்

குவால்காம் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட் கொண்டு இயக்குப்படுகின்ற நோட் 7 மாடலில் 3GB, 4GB என மொத்தமாக இரு விதமான ரேம் மாறுபாட்டில்  கிடைக்கின்றது. இதன் உள்ளடக்க மெமரி தேர்வு 3GB+32GB, 4GB+64GB என கிடைக்கின்றது.  மேலும் கூடுதலாக சேமிப்பை அதிகரிக்க 256GB வரையிலான மைக்ரோ எஸ்டி ஆதரவு வழங்கப்படுள்ளது.

பின்புறத்தில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த வசதியுடன் இயங்கும் இரண்டு கேமராவை பெற்று 48 மெகாபிக்சல் மற்றும் 5 மெகாபிக்சல் என இரண்டும் அமைந்துள்ளது. முன்புறத்தில் செல்பீ படங்களுக்கு 13 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. மிக விரைவாக சார்ஜிங் செய்யும் வகையில் குவால்காம் QuickCharge 4.0. உடன் கூடிய 4000mAh பேட்டரியுடன் டூயல் 4G VoLTE, Wi-Fi 802.11 b/g/n/ac, ப்ளூடூத் 5.0, GPS, GLONASS மற்றும் USB Type-C port ஆகியவற்றை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 7S விலை பட்டியல் பின் வருமாறு;-

ரெட்மி நோட் 7S 3GB+32GB – ரூ. 10,999

ரெட்மி நோட் 7S 4GB+64GB – ரூ. 12,999