redmi note 8

இந்தியாவில் சியோமி நிறுவனத்தின் ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 ப்ரோ என இரு ஸ்மார்ட்போன் மாடல்கள் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. குவாட் கேமராக்கள், 128ஜிபி வரை சேமிப்பிடம் மற்றும் 8ஜிபி ரேம் உள்ளிட்ட வசதிகளுடன் ரெட்மி நோட் 8 ப்ரோவின் சிறப்பம்சமாக 64 மெகாபிக்சல் உடன் குவாட் கேமரா உள்ளது. ரெட்மி நோட் 8 மாடலில் 48 மெகாபிக்சல் குவாட் ரியர் கேமராக்களுடன் வருகிறது.

ரெட்மி நோட் 8 சிறப்புகள்

சியோமி ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போனில் 6.3 அங்குல டாட் நாட்ச் டிஸ்ப்ளே 90 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த மொபைலை இயக்குவதற்கு குவால்காம் ஸ்னாப்டிராகன் 665 சிப்செட் உடன் 4ஜிபி ரேம் மற்றும் 6 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இந்த திறன்பேசியின் பின்புறத்தில் மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன, இதில் 48 மெகாபிக்சல் முதன்மை சென்சாராகவும், மீதமுள்ள கேமராக்கள் 8 மெகாபிக்சல் 120 டிகிரி அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் போர்ட்ரெய்ட் படங்களுக்கு 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா சென்சார் உள்ளது. இந்த கேமரா குறைந்த வெளிச்சம் உள்ள இரவு நேரங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

ஏஐ ஆதரவை பெற்ற முன்பக்க வீடியோ மற்றும் செல்ஃபி கேமரா 13 மெகாபிக்சல் சென்சாருடன்,  AI முறையில் அழகுபடுத்தல் அம்சத்தை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 8 ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 4,000 எம்ஏஎச் பேட்டரி கொண்டு கூடுதல் விருப்பங்களாக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் பாதுகாப்பு கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 8 விலை

நோட் 8 மாடல்  4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுக்கு ரூ .9,999 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கடைசியாக, 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி சேமிப்பு உடன் ரூ .12,999 ஆக உள்ளது.

redmi note 8 pro

ரெட்மி நோட் 8 ப்ரோ சிறப்புகள்

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.53 அங்குல டாட் நாட்ச் டிஸ்ப்ளே 91.4 சதவிகிதம் ஸ்கிரீன்-டு-பாடி விகிதத்துடன் கொண்டுள்ளது. இந்த மொபைலை இயக்குவதற்கு கேமிங் சார்ந்த மீடியாடெக் G90T சிப்செட் உடன் 6 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி ரேம் கொண்டுள்ளது. இந்த திறன்பேசியின் பின்புறத்தில் மொத்தம் நான்கு கேமராக்கள் உள்ளன. இதில், 9248 x 6936 பிக்சல் தீர்மானத்தில் படங்களை 64 மெகாபிக்சல் முதன்மை சென்சார் வழங்கும், மீதமுள்ள கேமராக்கள் 8 மெகாபிக்சல் 120 டிகிரி அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் மற்றும் போர்ட்ரெய்ட் படங்களுக்கு 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா சென்சார் உள்ளது. இந்த கேமரா குறைந்த வெளிச்சம் உள்ள இரவு நேரங்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

ஏஐ ஆதரவை பெற்ற முன்பக்க வீடியோ மற்றும் செல்ஃபி கேமரா 20 மெகாபிக்சல் சென்சாருடன்,  AI முறையில் அழகுபடுத்தல் அம்சத்தை பெற்றுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ ஸ்மார்ட்போன் 18W ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் மிகப்பெரிய 4,500 எம்ஏஎச் பேட்டரி கொண்டு கூடுதல் விருப்பங்களாக யூ.எஸ்.பி டைப்-சி போர்ட், டஸ்ட் மற்றும் ஸ்பிளாஷ் பாதுகாப்பு கொண்டுள்ளது.

ரெட்மி நோட் 8 ப்ரோ விலை

நோட் 8 ப்ரோவில் 6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட அடிப்படை மாடல் ரூ .14,999 , 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலுடன் கூடிய 6 ஜிபி ரேம் ரூ .15,999 எனவும், டாப்-எண்ட் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் பெற்றது ரூ .17,999 ஆக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு ஸ்மார்ட்போன்களும் அக்டோபர் 21 முதல் மதியம் 12:00 மணிக்கு அமேசான் இந்தியா வழியாக விற்பனைக்கு கிடைக்கும்.