மார்ச் 12.., ரெட்மி நோட் 9 இந்தியாவில் விற்பனைக்கு வெளியாகிறது

வரும் மார்ச் 12 ஆம் தேதி  சீனாவின் சியோமி நிறுவனத்தின் புதிய ஸ்மார்ட்போன் மாடலாக ரெட்மி நோட் 9, ரெட்மி நோட் 9 புரோ இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்படுவதனை அதிகாரப்பூர்வமாக இந்நிறுவனம் தனது ட்வீட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது.

ரெட்மி நோட் 8 மற்றும் ரெட்மி நோட் 8 புரோ மொபைல் வரிசையின் வெற்றியை தொடர்ந்து வெளியாக உள்ள புதிய நோட் 9 பல்வேறு சிறப்புகளை பெற்றதாக விளங்க உள்ளது. தற்போது வெளியிடப்பட்டுள்ள டீசரின் மூலம் இந்த மாடல் குவாட் கேமரா செட்டப் பெறுவதுடன் கேமரா பிரிவில் மேம்பட்ட பல்வேறு அம்சங்களை 64 எம்பி பிரைமரி சென்சாரை பெறும் வாய்ப்புகள் உள்ளது.

நடுத்தர நிலையில் வெளியிடப்பட உள்ள இந்த ஸ்மார்ட்போனில் மீடியாடெக் ஹீலியோ G70 சிப்செட்டினை ஆரம்ப நிலை ரெட்மி நோட் 9 மாடலும் பிரிமீயம் ரெட்மி நோட் 9 புரோ மாடல் ஸ்னாப்டிராகன் 700 வரிசை சிப்செடில் ஒன்றை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

 

ரெட்மி நோட் 9 மற்றும் ரெட்மி நோட் 9 புரோ மொபைல்கள் அடுத்த வாரம் விற்பனைக்கு வரவுள்ள ரியல்மி 6 மாடல்களுக்கும் சவாலினைசேற்படுத்தும் என்றே எதிர்பார்க்கப்படுகின்றது.