பாப் அப் செல்பி கேமரா, ஸ்னாப்டிராகன் 855 என கலக்கும் ரெட்மி ப்ரோ 2..!

சியோமி நிறுவனத்தின் துனை பிராண்டான ரெட்மியில் வெளியாக உள்ள புதிய சியோமி ரெட்மி ப்ரோ 2 (Redmi Pro 2) ஸ்மார்ட்போனின் முக்கிய விபரங்கள் மற்றும் படம் ஆகியவை இணையத்தில் வெளியாக எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு வெளியான ரெட்மி ப்ரோ வெற்றியை தொடர்ந்து ரெட்மி ப்ரோ 2 மாடலை சியோமி தயாரித்து வருகின்றது.

ரெட்மி ப்ரோ 2 ஸ்மார்ட்போனின் சிறப்புகள்

சமீபத்தில் ஸ்மார்ட்போன் சந்தையில் டிரென்டாகி வரும் ரெட்மி புரோ 2 போனில் பாப் அப் செல்பி கேமரா அம்சம் இருப்பது உறுதியாகியுள்ளது. இந்த போனில் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் உடன் டிரிபிள் ரியர் கேமரா கொண்ட இந்த போனில் சோனி IMX 48 எம்பி சென்சார் மற்றும் 2 எம்பி சென்சார் பெற்றிருக்கலாம் என கருதப்படுகின்றது.

இந்த போனினை இன் டிஸ்பிளே கை ரேகை சென்சார் , குவால்காம் ஸ்னாப்டிராகன் 855 சிப்செட் ஆகியவற்றை பெற்றிருப்பது உறுதியாகியுள்ளது. ஆண்ட்ராய்டு 9 பை இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு MIUI தளத்ததில் இயக்கப்படும் இந்த போனில் 3500mAh பேட்டரி மற்றும் வைஃபை, யுஎஸ்பி டைப்-சி போர்ட், NFC, GPS போன்றவை இடம்பெற்றிருக்கும்.