Redmi Y3: செல்ஃபி ரசிகர்களுக்கு சியோமி ரெட்மி Y3 விற்பனைக்கு வெளியானது

இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் புதிதாக சியோமி ரெட்மி Y3 ஸ்மார்ட்போன் ரூ.9,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. 4000mAh பேட்டரி கொண்டதாக இந்த மொபைல் போன் இயக்கப்படுகின்றது.

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்ட ரெட்மி Y1, ரெட்மி Y2 மொபைல் விற்பனை எண்ணிக்கை 7 மில்லியனுக்கு அதிகமாக பதிவு செய்துள்ள நிலையில் புதிய வை 3 மிகப்பெரிய சவாலினை ஏற்படுத்த உள்ளது.

சியோமி ரெட்மி Y3 விலை மற்றும் சிறப்புகள்

வருகின்ற ஏப்ரல் 30 ஆம் தேதி பகல் 12 மணிக்கு அமேசான் மற்றும் mi.com, மீ ஹோம் ஸ்டோர்களில் விற்பனைக்கு இந்த மொபைல் கிடைக்க உள்ளது. இந்த மொபைல் நீலம், சிவப்பு மற்றும் கருப்பு நிறங்களில் கிடைக்க உள்ளது.

6.26 அங்குல முழு எச்டி பிளஸ் டாட் நாட்ச் டிஸ்பிளே உடன் கூடிய 1520 × 720 பிக்சல் திர்மானம் மற்றும் 19:9 என்ற திரைவிகிதம் பெற்றதாக கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 பாதுகாப்புடன் அமைந்துள்ளது.

ரெட்மீ Y3 போனை இயக்குவதற்கு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 632 சிப்செட்  பொருத்தப்பட்டு 3 ஜிபி, 4 ஜிபி ரேம் மற்றும் 32 ஜிபி மற்றும் 64 ஜிபி முறையே உள் மெமரி கொண்டிருக்கின்றது. கேமரா சார்ந்த செயற்பாட்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்துடன் கூடிய 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் பிரைமரி ஆப்ஷனில் 12 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் பெற்றதாக கிடைக்கப் பெற்றுள்ளது.

சிறப்பான பேட்டரி ஆதரவை வழங்கும் வகையில் ரெட்மியின் ஒய் 3  போனில் 4000 மில்லி ஆம்பியர் ஹவர் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி கொண்டதாக ரெட்மி Y3 விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ரெட்மி Y3 ரூ. 9,999 (3GB+32GB)

ரெட்மி Y3 ரூ.11,999 (4GB+64GB)

மேலும் வாசிங்க – சியோமி ரெட்மி 7 விலை மற்றும் சிறப்புகள்

Redmi Y3: செல்ஃபி ரசிகர்களுக்கு சியோமி ரெட்மி Y3 விற்பனைக்கு வெளியானது

Xiaomi Redmi Y3 specifications

  • 6.26-inch (1520 × 720 pixels) HD+ 19:9 2.5D வளைந்த கிளாஸ் பாதுகாப்பு, கார்னிங் கொரில்லா கிளாஸ் பாதுகாப்பு 5
  • 1.8GHz ஆக்டோ கோர் ஸ்னாப்டிராகன் 632 14nm Mobile Platform with Adreno 506 GPU
  • 3GB RAM உடன் 32GB சேமிப்பு / 4GB RAM உடன் 64GB சேமிப்பு,
  • 512GB உடன் மைக்ரோஎஸ்டி அட்டை
  • ஆண்ட்ராய்டு 9 பின்பற்றி MIUI 10
  • இரட்டை சிம் கார்டு
  • 12MP உடன் எல்இடி ஃபிளாஷ், 1.12um pixel size, f/2.2 aperture, PDAF, செக்ன்டரி 2MP சென்சார்
  • 32MP செல்ஃபி கேமரா
  • கைரேகை சென்சார், இன்ஃபிராரெட்
  • Splash resistant (P2i nano coating)
  • 3.5mm ஆடியோ ஜாக், எஃப்எம் ரேடியோ
  • அளவுகள்: 158.73×75.58×8.47mm; எடை: 180g
  • Dual 4G VoLTE, WiFi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS + GLONASS
  • 4000mAh பேட்டரி