Home Tech News Mobiles புதிய Redmi Y3, Redmi 7 மொபைல் விற்பனைக்கு அறிமுகம்

புதிய Redmi Y3, Redmi 7 மொபைல் விற்பனைக்கு அறிமுகம்

இந்தியாவில் சியோமி ரெட்மி Y3 மற்றும் ரெட்மி 7  இரு மொபைல் போன் மாடல்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஆண்ட்ராய்டு பை ஓஎஸ் அடிப்படையாக கொண்ட சியோமி நிறுவன ஓஎஸ் மூலம் இயக்கப்படுகின்ற ரெட்மி ஒய்3 போனில்  6 அங்குல முழு எச்டி டிஸ்பிளே உடன் கூடிய 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டதாக விளங்கலாம்.

ரெட்மீ Y3 போனை இயக்குவதற்கு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்  பொருத்தப்பட்டு 4 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் மெமரி கொண்டிருக்கலாம். கேமரா சார்ந்த செயற்பாட்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்துடன் கூடிய சாம்சங் GD1 சென்சார் அடிப்படையிலான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் பிரைமரி ஆப்ஷனில் 12 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் பெற்றதாக கிடைக்கப் பெறலாம்.

25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4000 மில்லி ஆம்பியர் ஹவர் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி கொண்டதாக ரெட்மி Y3 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version