Home Tech News Mobiles ஏப்ரல் 24-ல் சியோமி ரெட்மி Y3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது

ஏப்ரல் 24-ல் சியோமி ரெட்மி Y3 ஸ்மார்ட்போன் அறிமுகமாகிறது

வரும் ஏப்ரல் 24 ஆம் இந்திய சந்தையில் புதிய 32 எம்பி சென்சார் பெற்ற ரெட்மி Y3 அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்தியாவின் மிகப்பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக சியோமி ரெட்மி விளங்குகின்றது.

முந்தைய ரெட்மி Y வரிசை போல இந்த முறை மிக சிறப்பான செல்ஃபி கேமரா ஆப்ஷனுடன் மிகவும் திறன் வாய்ந்த 4000 மில்லி ஆம்பியர் பேட்டரி பொருத்தப்பட்டதாக விற்பனைக்கு வரவுள்ளது.

சியோமி ரெட்மி Y3 ஸ்மார்ட்போனின் எதிர்பார்ப்புகள்

சியோமி நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர் மனு குமார் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள டிவிட்டில், அடுத்த சில தினங்களில் 32 எம்பி சூப்பர் செல்ஃபி கேமரா பெற்ற மாடல் விற்பனைக்கு ஏப்ரல் 24-04-2019 வெளியிடப்பட உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

ஆண்ட்ராய்டு பை ஓஎஸ் அடிப்படையாக கொண்ட சியோமி நிறுவன ஓஎஸ் மூலம் இயக்கப்படுகின்ற ரெட்மி ஒய்3 போனில்  6 அங்குல முழு எச்டி டிஸ்பிளே உடன் கூடிய 1080 பிக்சல் திர்மானம் மற்றும் 18:9 என்ற திரைவிகிதம் கொண்டதாக விளங்கலாம்.

ரெட்மீ Y3 போனை இயக்குவதற்கு ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்  பொருத்தப்பட்டு 4 ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி உள் மெமரி கொண்டிருக்கலாம். கேமரா சார்ந்த செயற்பாட்டில் செயற்கை நுண்ணறிவு சார்ந்த அம்சத்துடன் கூடிய சாம்சங் GD1 சென்சார் அடிப்படையிலான 32 மெகாபிக்சல் செல்பீ கேமரா மற்றும் பிரைமரி ஆப்ஷனில் 12 மெகாபிக்சல் பிரைமரி கேமரா சென்சார் மற்றும் 2 மெகாபிக்சல் பெற்றதாக கிடைக்கப் பெறலாம்.

25 வாட் சூப்பர் ஃபாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4000 மில்லி ஆம்பியர் ஹவர் பேட்டரி மற்றும் டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை,ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி கொண்டதாக ரெட்மி Y3 விற்பனைக்கு வெளியிடப்பட உள்ளது.

Exit mobile version