இந்தியாவின் முன்னணி ஸ்மார்ட்போன் தயாரிப்பாளராக விளங்கும் சீனாவை மையமாக கொண்டு செயல்படும் சியோமி நிறுவனம் இந்தியாவில் குறைந்த விலை மற்றும் பல்வேறு அம்சங்களை பெற்ற தேசத்தின் ஸ்மார்ட்போன் மாடலை இன்று பகல் 12 மணிக்கு விற்பனைக்கு வெளியிட உள்ளது.

குறைந்த விலை ஸ்மார்ட்போன்

மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட உள்ள இந்த புதிய மாடல் பற்றி எவ்விதமான நுட்ப விபரங்களும் வெளியாகவில்லை என்ற போதும், நிச்சயமாக இந்த மொபைல் போன் மிகுந்த சவாலான அம்சங்களுடன் உள்ளூர் மக்கள் பெரும்பாலான வசதிகளை பெறும் வகையில் அமைந்திருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ள டீசரில் #DeshKaSmartphone என்ற ஹேஸ்டேக்குடன் விளம்பரப்படுத்தப்பட்டு வருகின்றது.  சமீபத்தில் இந்நிறுவனத்தின் ரெட்மி Y1 மற்றும் ரெட்மி Y1 லைட் ஆகிய மொபைல் போன்கள் வெளியிடப்பட்டிருந்த நிலையில் இதுனுடைய வரிசையில் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

சியோமி இந்தியா நிறுவனத்தின் மூன்றாவது உற்பத்தி தொழிற்சாலை நொய்டா பகுதியில் தொடங்கப்பட்டுள்ளது.இந்த ஆலை ஸ்மார்ட்போன் அல்லாத பவர் பேங்க்குகளை உற்பத்தி செய்வதற்கான ஆலையாக விளங்குகின்றது.

சமீபத்தில் வெளியான சியோமி மி பவர் பேங்க் 2i மாடலில் 10,000mAh விலை ரூ.749 மற்றும் 20,000mAh பெற்ற மாடல் ரூ.1499 விலையில் கிடைக்க தொடங்கியுள்ளது.

நேரலையில் அறிமுகத்தை காண ; – http://event.mi.com/in/live2017/DeshKaSmartPhone