ரூ.1 பிளாஷ் டீல்களுடன் கூடிய சியோமி "தீபாவளி வித் மீ" சேல் இன்று முதல் தொடங்குகிறது

ஒவ்வொரு ஆண்டும் விழாக்காலத்தை முன்னிட்டு தங்கள் தயாரிப்புகளுக்கு பல்வேறு சலுகைகளை சியோமி நிறுவனம் அறிவித்து வருகிறது. இந்நிலையில் எதிர்வரும் தீபாவளியை முன்னிட்டு “தீபாவளி வித் மீ” சேல் ஒன்றை இன்று முதல் தொடங்க உள்ளது. இதில் சியோமி மீ A2, போகோ F1, ரெட்மீ 6A & மீ LED டிவி களுக்கு ரூ.1 பிளாஷ் டீல்களை அறிவித்துள்ளது.

இன்று தொடங்கும் இந்த சேல் வரும் வரும் 25ம் தேதி வரை நடத்த திட்டமிட்டுள்ள சியோமி நிறுவனம், இந்த நாட்களில் தங்கள் தயாரிப்புகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு டிஸ்கவுண்ட்களுடன் கேஷ்பேக் ஆப்பர்களையும் வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த ஆப்பர்கள் புதிய வாடிக்கையாளர்கள் மட்டுமின்றி ஏற்கவனே சியோமி வாடிக்கையாளர்களாக உள்ளவர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த ஆப்பர்களை ஆப்லைன் ஸ்டோர்களில் இன்று தொடங்கும் சியோமி நிறுவனம் அந்த ஆப்பர்களை வரும் நவம்பர் 7ம் தேதி வரை தொடரும் என்று தெரிவித்துள்ளது.

ரூ.1 பிளாஷ் டீல்களுடன் கூடிய சியோமி "தீபாவளி வித் மீ" சேல் இன்று முதல் தொடங்குகிறது

தீபாவளி விற்பனையை தவிர்த்து, எஸ்பிஐ கார்டுகளை பயன்புட்தி 7500 ரூபாக்கு மேல் பொருட்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு750 ரூபாய் கேஷ்பேக் கிடைக்கும். இருந்தபோதும் சியோமி ரெட்மீ நோட் 5 புரோ அல்லது போகோ F1 போன்களை பேடிஎம் மூலம் வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் தள்ளுபடி கிடைக்கும். . இதுமட்டுமின்றி மொபிக்விக் வால்ட் மூலம் பணம் செலுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 20 சதவிகிதம் கேஷ்பேக் மூலம் 2000 ரூபாய் வரை பெறலாம்.

ஆப்லைன் வாடிக்கையாளர்கள் 10,000 ரூபாய் மதிப்பு கொண்ட போனை பேடிஎம் மூலம் பணம் செலுத்தி வாங்கினால் 500 ரூபாய் வவுச்சர் கிடைக்கும். மேலும் 1,000 வரை கேஷ்பேக் பெறலாம், எஸ்பிஐ பேங்க் கார்டுகள் மூலம் 8,000 ரூபாய்க்கு மேலே உள்ள மொபைல்களை வாங்குபவர்களுக்கு 500 ரூபாய் கேஷ்பேக் வழங்கப்படும்

இதுமட்டுமின்றி ஒரு ரூபாய் பிளாஷ் சேல் ஒன்றையும் அறிவித்துள்ளது. ஒவ்வொரு நாளும் இரண்டு சியோமி தயாரிப்புகளை வெறும் ஒரு ரூபாய் விலையில் விற்பனை செய்ய உள்ளது. மேலும் ரெட்மீ நோட் 5 புரோ, ரெட்மீ Y2, ரெட்மீ மீ A2, சிநோமி மீ LED டிவி 4A, மீ பவர் பேங்க் 2i மற்றும் பல ஸ்மார்ட்போன்’களுக்கு டிஸ்கவுன்ட் அளிக்கப்படும்