குறைவான விலையில் சோலோ ZX விற்பனைக்கு வெளியானது

இந்தியாவைச் சேர்ந்த சோலோ நிறுவனம், வெளியிட்டுள்ள புதிய சோலோ ZX ஸ்மார்ட்போனில் 6.22 அங்குல டிஸ்பிளே பெற்று, இரு கேமரா கொண்டதாக 4ஜிபி ரேம் மற்றும் 6ஜிபி ரேம் என இரு விதமான மாறுபாட்டில் கிடைக்கின்றது.

செயற்கை அறிவுத்திறன் சார்ந்த கேமிங் மோட் கொண்டுள்ள இந்த போனில் மீடியாடெக் ஹீலியோ P22 சிப்செட் கொண்டு இயக்கப்படுகின்றது. வருகின்ற ஏப்ரல் 25 முதல் அமேசான் இந்தியா இணையதளத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

சோலோ ZX சிறப்புகள் மற்றும் விலை

வருகின்ற ஏப்ரல் 25 முதல் அமேசான் இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்க உள்ள சோலோ இசட்எக்ஸ் 4ஜிபி ரேம் + 64ஜிபி உள் சேமிப்பு விலை ரூ.11,499 மற்றும் 6ஜிபி ரேம் + 128 ஜிபி உள் சேமிப்பு விலை 13,999 ஆகும். ஜிய வழங்குகின்ற ரூ.2200 வரையிலான கேஷ்பேக் சலுகை, 50 ஜிபி கூடுதல் டேட்டா போன்றவற்றை இந்நிறுவனம் வழங்குகின்றது.

குறைவான விலையில் சோலோ ZX விற்பனைக்கு வெளியானது

இந்த போனில் 6.22 அங்குல (1520×720 pixels) HD பிளஸ் திரையுடன் 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ் உடன் கூடிய கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு அம்சம் கொண்டு 2GHz ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ P22 சிப் உடன் 4GB RAM உடன் 64GB உள் மெமரி, 6GB RAM உடன் 128GB உள் மெமரி கொண்டதாக அமைந்துள்ளது.

எல்இடி ஃபிளாஷ் உடன் கூடிய 13 மெகாபிக்சல் ரியர் கேமரா சென்சாருடன் கூடுதலாக 5 மெகாபிக்சல் சென்சார் மற்றும் அடுத்தப்படியாக செல்ஃபி மற்றும் வீடியோ கால்களுக்கு 16 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

கைரேகை சென்சார், 3260mAh பேட்டரி உடன் கூடிய இதில் இரட்டை 4G VoLTE, WiFi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ் போன்றவை உள்ளது.

குறைவான விலையில் சோலோ ZX விற்பனைக்கு வெளியானது

Xolo ZX specifications

  • 6.22-inch (1520×720 pixels) HD+ 19:9 IPS 2.5D வளைந்த கிளாஸ், கார்னிங் கொரில்லா கிளாஸ் 3
  • 2GHz ஆக்டோ கோர் மீடியாடெக் ஹீலியோ P22 (MT6762) 12nm processor with 650MHz IMG PowerVR GE8320 GPU
  • 4GB RAM உடன் 64GB உள் மெமரி, 6GB RAM உடன் 128GB உள் மெமரி,
  • 256GB உடன் microSD
  • இரு சிம்
  • 13MP ரியர் கேமராவுடன் எல்இடி ஃபிளாஷ், 5MP கூடுதல் கேமரா
  • 16MP முன்புற கேமரா
  • கைரேகை சென்ஆர்
  • இரட்டை 4G VoLTE, WiFi 802.11 b/g/n, ப்ளூடூத் 5, ஜிபிஎஸ்
  • 3260mAh பேட்டரி