மைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் யூ பிராண்டின் யூ யூனிக்யூ 2 மொபைல் ரூ.5,999 விலையில் இன்று முதல் விற்பனைக்கு ஃபிளிப்கார்ட் தளத்தில் கிடைக்க தொடங்கியுள்ளது.

13 மெகாபிக்சல் கேமரா பெற்ற யூ யூனிக்யூ 2 மொபைல் விலை ரூ.5999

யூ யூனிக்யூ 2

யூ நிறுவனத்தின் யுரேகா பிளாக் மொபைலை தொடர்ந்து விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள யூ யூனிக்யூ 2 மொபைல் பட்ஜெட் விலையில் 13 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனுடன் கூடிய மொபைலாக கிடைக்கின்றது.

டிசைன் & டிஸ்பிளே

பிளாக் மற்றும் சாம்பேகன் என இரு நிறத்தில் மிக சிறப்பான ஃபினிஷிங் செய்யப்பட்ட யூ யூனிக்யூ 2 ஸ்மார்ட்போனில்  5 அங்குல HD தரத்துடன் கூடிய 1280×720 பிக்சல் தீர்மானத்தை பெற்ற கொரில்லா கார்னிங் கிளாஸ் 3 பாதுகாப்பு பெற்றதாக வந்துள்ளது.

13 மெகாபிக்சல் கேமரா பெற்ற யூ யூனிக்யூ 2 மொபைல் விலை ரூ.5999

பிராசஸர் & ரேம்

யூனிக்யூ 2 ஸ்மார்ட்போனில் 1.3Ghz மீடியாடெக் குவாட் கோர் பிராசஸருடன் கூடிய 2 ஜிபி ரேம் பெற்று 16ஜிபி வரை உள்ளடங்கிய சேமிப்பு வசதியை கொண்டதாக விளங்குகின்றது. மெமரி ஆப்ஷனை நீட்டிக்க எஸ்டிகார்டு ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

கேமரா

கேமரா துறையில் கவனிக்க வேண்டிய அம்சமாக மிக சிறப்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோ பதிவு செய்யும் வகையில் யூனிக்யூ 2 மொபைலில் 13 மெகாபிக்சல் பின்புற கேமரா வழங்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் செல்ஃபீ மற்றும் வீடியோ அழைப்புகளை எதிர்கொள்ள 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

13 மெகாபிக்சல் கேமரா பெற்ற யூ யூனிக்யூ 2 மொபைல் விலை ரூ.5999

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌகட் ஓஎஸ் தளத்தில் செயல்படுகின்ற யூனிக்யூ 2 மொபைலில் 2500 mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

4ஜி வோல்ட்இ, வை-ஃபை, புளூடூத், உள்ளிட்ட அடிப்படையான அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது.

13 மெகாபிக்சல் கேமரா பெற்ற யூ யூனிக்யூ 2 மொபைல் விலை ரூ.5999

விலை

ஃபிளிப்கார்ட் இணையதளத்தில் இன்று 12 மணி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள யூ யூனிக்யூ மொபைல் விலை ரூ. 5,999 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here