அட்டகாசமான யூ யுரேகா 2 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்ததுமைக்ரோமேக்ஸ் நிறுவனத்தின் கீழ் செயல்படும் யூ மொபைல் தயாரிப்பாளரின் யூ யுரேகா 2 ஸ்மார்ட்போன் ரூ.11,999 விலையில் ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே சேல் தினத்தில் விற்பனைக்கு வரவுள்ளது.

யூ யுரேகா 2 ஸ்மார்ட்போன்

செப்டம்பர் 20ந் தேதி தொடங்க உள்ள ஃப்ளிப்கார்ட் பிக் பில்லியன் டே தினத்தில் சந்தைக்கு வரவுள்ள யுரேகா 2 1920 x 1080 பிக்சல் தீர்மானத்துடன் 4ஜிபி ரேம் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

மெட்டல் யூனிபாடி அம்சத்தை பெற்ற யுரேகா 2 மொபைல் 5.5 அங்குல திரையுடன் 1920 x 1080 பிக்சல் தீர்மானத்தை கொண்ட இந்த கருவி கோல்டு நிறத்தில் மட்டுமே கிடைக்கின்றது.

பிராசெஸர் & ரேம்

யுரேகா 2 குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 சிப்செட் பிராசஸருடன் 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி உள்ளடக்க சேமிப்பினை கொண்டதாக உள்ள இதில் சேமிப்பு திறனை 128ஜிபி வரை மைக்ரோ எஸ்டி அட்டை வழியாக அதிகரிக்கலாம்.

கேமரா துறை

பின்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா பெற்ற இந்த மொபைலில் எல்இடி ஃபிளாஷ் கொண்டதாக உள்ளது. முன்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளத்துடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் 3930mAh பேட்டரி கொண்டு இயக்கப்படுகின்றது.

மற்றவை

4G எல்டிஇ, விஒஎல்டிஇ, வை-ஃபை 802.11 b/g/n, ப்ளூடூத் 4.1, ஜிபிஎஸ் மற்றும் மைக்ரோ யூஎஸ்பி போர்ட் ஆகியவற்றை வழங்கியுள்ளது.

விலை

யூ யுரேகா 2 ஸ்மார்ட்போன் விலை ரூ.11,999 ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here