பட்ஜெட் விலையில் 4ஜி வோல்ட்இ ஆதரவு மற்றும் கைரேகை சென்சார் போன்ற வசதிகளை பெற்றிருப்பதுடன் நிக்கி ஏஐ (Nikki Ai) பாட் பெற்ற ஜென் அட்மையர் சென்ஸ் விலை ரூ.5999 மட்டுமே ஆகும்.
ஜென் அட்மையர் சென்ஸ்
பட்ஜெட் விலையில் பட்டைய கிளப்பும் அம்சங்களுடன் வந்துள்ள ஸென் அட்மையர் சென்ஸ் ஸ்மார்ட்போனில் நீலம் மற்றும் கோல்டு நிறத்துடன் பேக் பேனலில் அமைந்துள்ள கைரேகை சென்சார் வசதியுடன் கூடிய இந்த ஸ்மார்ட்போனில் மற்றொரு சிறப்பு அம்சமாக நிக்கி எனும் பெயர்கொண்ட செயற்கை நுண்ணறிவு பெற்ற பாட் வசதி வழங்கப்பட்டுள்ளது.
நிக்கி ஏஐ
இந்தியாவைச் சேர்ந்த ஜென் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள அட்மையர் சென்ஸ் மொபைலில் நிக்கி ஏஐ எனும் பாட் உணவு ஆர்டர் செய்ய , ரீசார்ஜ், கேப், பஸ் மற்றும் ஹோட்டல் ரூம் புக்கிங் உள்பட மூவி டிக்கெட்ஸ் போன்றவற்றை பெற உதவிகரமானதாக இந்த பாட் அமையும் என ஜென் தெரிவிக்கின்றது.
ஆண்ட்ராய்டு 6.0 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுகின்ற அட்மியர் சென்ஸ் ஸ்மார்ட்போனில் 4.5 அங்குல FWVGA திரை 480×854 பிக்சல் தீர்மானத்தை கொண்டதாக 1.3GHz குவாட் கோர் பிராசஸர் மூலம் இயக்கப்பட 1ஜிபி ரேம் பெற்றுள்ளது. இதில் 8ஜிபி மெமரி வசதியுடன் கூடுதல் சேமிப்பை பெற மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 32ஜிபி வரை அதிகரிக்கலாம்.
கேமரா
5 மெகாபிக்சல் முன் மற்றும் பின்புற கேமராவில் ஆட்டோஃபோகஸ் மற்றும் எல்இடி ஃபிளாஷ் வழங்கப்பட்டுள்ளது. இதன் கேமராவில் உள்ள விஷ்டோசோ (Vistoso) எனும் வசதி விருப்பமான படங்களை டி-ஷர்ட் , கப் போன்றவற்றில் பிரின்டிங் செய்யும் வகையிலான வசதியை வழங்குகின்றது.
2300mAh பேட்டரி திறனால் இயக்கப்படுகின்ற இந்த மொபைலில் ஒற்றை சிம் ஆதரவு பெற்று 4ஜி வோல்ட்இ ஆப்ஷனை பெற்றுள்ளது.
ஜென் அட்மையர் சென்ஸ் நுட்பவிபரம்
வசதிகள் | ஜென் அட்மையர் சென்ஸ் |
டிஸ்பிளே | 5 இன்ச் |
பிராசஸர் | 1.3GHZ |
ரேம் | 1GB |
சேமிப்பு | 8GB நீட்டிக்க SD கார்டு 32GB |
பின் கேமரா | 5MP |
முன் கேமரா | 5MP |
ஓஎஸ் | ஆண்ட்ராய்டு 6.0 |
பேட்டரி | 2,620mAh |
ஆதரவு | ஒருசிம், 4G VoLTE, புளூடுத், ஜிபிஎஸ், வை-ஃபை |
விலை | ரூ. 5,999 |