ரூ.875க்கு ஜியோக்ஸ் ஃபீச்சர் மொபைல் போன் விற்பனைக்கு வந்தது

ஃபீச்சர் ரக மொபைல் போன் தயாரிப்பாளரான இந்தியாவின் ஜியோக்ஸ் மொபைல்ஸ் நிறுவனம், ரூ. 875 விலையில் ஜியோக்ஸ் X3 மற்றும் ரூ. 899 விலையில் ஜியோக்ஸ் X7 என இரு ஃபீச்சர் ரக மொபைல் போனை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஜியோக்ஸ் மொபைல்

ஜியோக்ஸ் நிறுவனம் ஒரு கையில் இயங்குவதற்க்கு ஏற்ற வகையிலான இரு ஃபீச்சர் ரக மொபைல்களை பல்வேறு வசதிகளுடன் ஆங்கிலம் உட்பட பிராந்திய மொழிகள் ஆதரவை கொண்டதாக வந்துள்ளது.

1.8 அங்குல டிஸ்பிளே கொண்டதாக வந்துள்ள பின்புற கேமரா கொண்டு ஃபிளாஷ் பெற்று அமைந்துள்ளது. தானியங்கி முறையில் ரெக்கார்டிங் பெற்று எல்இடி டார்ச் லைட், மொபைல் டிராக்கர், ப்ரீ லோடு செயலிகள் உட்பட பன்பலை ரேடியோ மற்றும் இரட்டை சிம் கார்டினை பெற்றதாக வந்துள்ளது.

1000mAh பேட்டரி கொண்டதாக X7 மொபைல் விளங்குகின்றது. மேலும் 800mAh பேட்டரி கொண்டதாக X3 போன் விளங்குகின்றது. ஜியோக்ஸ் X7 போன் கருப்பு , நீலம், மற்றும் சிவப்பு நிறத்திலும், ஜியோக்ஸ் X3 போன் நீலம் , ஆரஞ்சு, சில்வர் மற்றும் மஞ்சள் நிறங்களில் கிடைக்க உள்ளது.