மோட்டோ G5 ஸ்மார்ட்போன் ரூ.11,999 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. G5 மொபைல் அமேசான் வழியாக இன்று இரவு முதல் 12 மணிக்கு விற்பனைக்கு கிடைக்க தொடங்க உள்ளது.

ரூ.11,999 விலையில் மோட்டோ G5 மொபைல் விற்பனைக்கு வந்தது

மோட்டோ G5

ஆண்ட்ராய்டு நெளகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற ஜி5 கருவியில்  5 முழு ஹெச்டி  திரையுடன்  1080p பிக்சல் தீர்மானத்தை கொண்டிருப்பதுடன் , க்வால்காம் ஸ்னாப்டிராகன் 430 SoC, இணைந்து செயல்படுகின்ற 3GB ரேம் ஆப்ஷன்களுடன்  16GB சேமிப்பு அமைப்பினை பெற்று விளங்குகின்றது. கூடுதல் சேமிப்பு வசதியை பெற மைக்ரோஎஸ்டி கார்டு பயன்படுத்தி கொள்ளலாம்.

மோட்டோ G5 கருவியில்  12 மெகாபிக்சல் ரியர் கேமரா f/2.0 aperture மற்றும் PDAF போன்ற வசதிகளுடன் விளங்குகின்றது. மேலும் 5 மெகாபிக்சல் முன்புற கேமரா ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது.ரூ.11,999 விலையில் மோட்டோ G5 மொபைல் விற்பனைக்கு வந்தது

2,800mAh திறனை கொண்டுள்ள நீக்கும் வகையிலான பேட்டரியை பெற்றிருப்பதுடன் விரைவாக சார்ஜ் ஏறும் அமைப்பினை பெற்று  விளங்குகின்ற இந்த மொபைலில் கூடுதல் வசதிகளாக 4G VoLTE, வை-ஃபை, ப்ளூடூத் மற்றும் ஜிபிஎஸ் போன்றவை இடம்பெற்றுள்ளது.

ரூபாய் 11,999 விலையில் மோட்டோ ஜி5 மாடல் விற்பனைக்கு கிடைக்கின்றது. மேலும் சிறப்பு சலுகையாக அமேசான் பிரைம் வாடிக்கையாளர்களுக்கு ரூ.1000 வரை விலை சலுகையை பெறலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here