மோட்டோ ஜி5 பிளஸ் விற்பனைக்கு வந்தது

மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி5 பிளஸ் விலை ரூ.ரூ.14,999 விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஃபிளிப்கார்ட் தளத்தில் இன்று இரவு 12 மணி முதல் விற்பனை தொடங்கப்பட உள்ளது.

மோட்டோ ஜி5 பிளஸ்

  • மோட்டோ ஜி5 பிளஸ் கூகுள் அசிஸ்டென்ட் வசதி இடம்பெற்றுள்ளது.
  • ஜி5 பிளஸ் கருவி ஆண்ட்ராய்டு நெளகட் 7.0 செயல்படுகின்றது.
  • பைன் கோல்டு மற்றும் கிரே வண்ணங்களில் கிடைக்கும்.
  • 3GB ரேம் 16 ஜிபி மெமரி மற்றும் 4GB ரேம் 32ஜிபி என இருவிதமான வேரியண்டில் கிடைக்கின்றது

ஆண்ட்ராய்டு நெளகட் 7.0 இயங்குதளத்தில் செயல்படுகின்ற ஜி5 ப்ளஸ் கருவியில்  5.2 முழு ஹெச்டி திரையுடன்  க்வால்காம் ஸ்னாப்டிராகன் 625 இணைந்து செயல்படுகின்ற வகையில் மொத்தம் 3 விதமான ரேம் ஆப்ஷனுடன் விளங்குகின்றது.   3GB மற்றும் 4GB ரேம் ஆப்ஷன்களுடன்  16GB மற்றும் 32 GB என இருவிதமான சேமிப்பு அமைப்புகளை பெற்றுவிளங்குகின்றது.

கேமரா

மோட்டோ G5 Plus கருவியில்  12 மெகாபிக்சல் ரியர் கேமரா மற்றும்  5 மெகாபிக்சல் முன்புற கேமரா ஆப்ஷனை பெற்றுவிளங்குகின்றது.

G5 பிளஸ் ஸ்மார்ட்போனில் 3,000mAh திறனை கொண்டுள்ள நீக்கும் வகையிலான பேட்டரியை பெற்றிருப்பதுடன்  மோட்ரோலா டர்போபவர் ஃபாஸ்ட் சார்ஜிங் அம்சத்தின் வாயிலாக விரைவாக சார்ஜ் ஏறும் அமைப்பினை பெற்று விளங்குகின்றது.

ஜி5 பிளஸ் விலை
  • 3GB ரேம் 16 ஜிபி மெமரி – ரூ.14,999
  • 4GB ரேம் 32ஜிபி மெமரி – ரூ.16,999

Recommended For You