லெனொவா நிறுவனத்தின் மோட்டோரோலா மோட்டோ G5S மொபைல் ரூ.13,999 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. மோட்டோ ஜி5எஸ்  அமேசான் இணையதளத்தில் கிடைக்கின்றது.

மோட்டோ G5S பிளஸ்

மோட்டோ ஜி5எஸ் மாடலில் 4ஜிபி ரேம் வசதியுடன் அதிகபட்சமாக 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பை பெற்ற ஜி5எஸ் கருவியில் 16 மெகாபிகசல் கேமரா கொண்டதாக கிடைக்கின்றது.

டிசைன் & டிஸ்பிளே

மோட்டோ ஜி5எஸ் ஸ்மார்ட்போனில் 5.2-இன்ச் முழு எச்டி டிஸ்பிளேவை பெற்று 1080×1920 பிக்சல் தீர்மானம் கொண்டதாக கிடைக்கின்ற மொபைல் கிரே மற்றும் கோல்டு ஆகிய நிறங்களில் கிடைக்க உள்ளது.

பிராசஸர் & ரேம்

21.4GHz ஆக்டோ-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 430 பிராசஸர் பெற்றதாக உள்ள மொபைல்போனில் 4ஜிபி ரேம் மாடலில் 64ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு உடன் கிடைக்கின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128ஜிபி வரை நீட்டிக்கலாம்.

கேமரா துறை

மோட்டோ ஜி5எஸ் பிளஸ் மாடலில் ரியர் கேமரா பொறுத்தவரை 16 மெகாபிக்சல் உடன்  f/2.0, கலர் பேலன்சிங் மற்றும் எடிட்டிங் மென்பொருள் ஆகியவற்றை கொண்டுள்ளது, முன்புறத்தில் எல்இடி ஃபிளாஷ், f/2.0 வசதிகளுடன் வீடியோ அழைப்பு மற்றும்  செல்பி படங்களுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு நௌவ்கட் 7.1 இயங்குதளத்தை கொண்டு செயல்படுத்தப்படுகின்ற ஜி5 எஸ் மொபைல் போன் மிக வேகமாக சார்ஜாகின்ற டர்போசார்ஜிங் நுட்பத்தினை பெற்றதாக 3,000mAh பேட்டரி இடம்பெற்றுள்ளது.

மற்றவை

4G VoLTE ஆதரவு, மைக்ரோ-யூஎஸ்பி, புளூடூத் 4.2, ஜிபிஎஸ், Wi-Fi 802.11 a/b/g/n, மற்றும் 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை பெற்றதாக கிடைக்க உள்ளது.

விலை

அமேசான் இந்தியா இணையதளத்தில் இன்றிரவு 11.59 மணிக்கு விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இந்தியாவில் மோட்டோ ஜி5எஸ் விலை ரூ. 13,999 மட்டுமே