ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிவோம்.கூகுள் வெளியிட்டுள்ள ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் அடுத்த பதிப்பு ஆண்ட்ராய்டு 9.0 அல்லது ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் டெவெலப்பர்ஸ் ப்ரிவியூ அம்சத்தை வெளியிட்டுள்ள நிலையில் ஆண்ட்ராய்டு பி பதிப்பில் வரவுள்ள முக்கிய அம்சங்களை பற்றி தொடர்ந்து அறிந்து கொள்ளலாம்.

ஆண்ட்ராய்டு P

 

ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளத்தை தொடர்ந்து வரவுள்ள ஆண்ட்ராய்டு பி இயங்குதளத்தில் பல்வேறு முக்கிய அம்சங்களில் இன்டோர் நேவிகேஷன் மேப், நோட்டிஃபிகேஷன் மேம்பாடு, மல்டி கேமரா ஆதரவு என பல்வேறு அம்சங்களை கொண்டதாக விளங்குகின்றது.

ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிவோம்.

மேம்படுத்தப்பட்ட அறிவிக்கைகள்

தற்போது வழங்கப்பட்டு வரும் நோட்டிஃபிகேஷன் அம்சத்தை விட மேம்படுத்தப்பட்ட வகையில் குறைந்த டிசைனில் மிக எளிமையாக காட்சியளிக்கின்றது. தொடர்புகளின் படங்கள் உட்பட எளிமையாக ஸ்மார்டாக பதில் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்மார்ட் ரிப்ளை சிஸ்டம் அம்சத்தை கொண்டதாக நோட்டிஃபிகேஷன் விளங்குகின்றது.

மல்டி கேமரா சப்போர்ட்

பல்வேறு ஸ்மார்ட்போன் நிறுவனங்கள் தொடர்ந்து முன் மற்றும் பின்புறங்களில் இரட்டை கேமரா என கூடுதல் கேமராக்கள் தற்போதைய மொபைல்களில் அடிப்படை அம்சமாக வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒரே சமயத்தில் இரண்டு கேமராக்களையும் இயக்கும் வகையிலான அம்சத்தை வழங்குவதுடன், புகைப்படத்தின் தரம் கூடுதல் அம்சங்களை கொண்டதாக கேமரா மேம்பாடு வழங்கப்படுள்ளது.

ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிவோம்.

இன்டோர் நேவிகேஷன்

கூகுள் மேப் வெளிதோற்ற அமைப்பில் வழங்கப்படுகின்ற அம்சத்தை போன்றே, இன்டோரில் மிக சிறப்பான வகையில் , வரைபடத்தை பெறுவதற்காக மேம்பட்ட அம்சத்தை கொண்டதாக இன்டோர் நேவிகேஷன் மேப் WiFi Round-Trip-Time (RTT) வாயிலாக பெற வழிவகுக்கின்றது.

ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிவோம். ஆண்ட்ராய்டு P இயங்குதளத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி அறிவோம்.

இந்த வருட இறுதிக்குள் ஆண்ட்ராய்டு பி அல்லது ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளம் கூகுள் பிக்சல் ஸ்மார்ட்போன்களுக்கு அறிமுகம் செய்யப்பட்ட உள்ள நிலையில் மற்ற மொபைல் பிராண்டுகளுக்கு படிப்படியாக விரிவாக்கப்பட உள்ளது.