ஆண்ட்ராய்டு ஓ எனப்படும் ஓரியோ இயங்குதளம் வெளிவந்த சில வாரங்களிலே அடுத்த பதிப்பான ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தை ஆண்ட்ராய்டு பி என்ற குறியீட்டு கொண்டதாக கூகுள் உருவாக்க உள்ளது.

ஆண்ட்ராய்டு பி

A,B,C வரிசையில் ஆண்ட்ராய்டு பதிப்புகளுக்கு பெயிரிட்டு வருவதுடன்,உணவு பண்டங்கள் அடிப்படையிலே பெயரிடப்பட்டு வரும் நிலையில் அடுத்த பதிப்பிற்கான முதற்கட்ட பணிகளை கூகுள் ஆண்ட்ராய்ட் குழு தொடங்கியுள்ளதாக XDA தளம் குறிப்பிட்டுள்ளது.

அடுத்த இயங்குதளம் மிக சிறப்பான அம்சங்களுடன் ஓரியோ இயங்குதளத்தை விட கூடுதலான வசதிகள் மற்றும் செயற்கை நுன்ன்றிவுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கலாம்.

அடுத்த பதிப்பு 2018 ஆம் ஆண்டின் இறுதி மாதங்களில் அதிகார்வப்பூர்வமாக ஆண்ட்ராய்டு பி என்ற பெயரில் வரும் என்பதனால் எந்த இனிப்பு பெயர் வைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

மேலும் படிங்க – ஆண்ட்ராய்டு ஓரியோ சிறப்புகள் அறிவோம்