வரும் ஜூன் 13ந் தேதி இந்தியாவில் நோக்கியா பிராண்டின் ஸ்மார்ட்போன் மாடல்களான நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 ஸ்மார்ட்போன்கள் களமிறங்குவது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் நோக்கியா 3 , நோக்கியா 5 நோக்கியா 6 ஜூன் 13 முதல்

இந்தியவில் நோக்கியா 3

ஹெச்எம்டி கீழ் செயல்படுகின்ற நோக்கியா பிராண்டில் முதன்முறையாக  இந்தியாவில் நோக்கியா 3310 மொபைல் ரூ.3310 விலையில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த ஃபீச்சர் மொபைல் ஆஃப்லைனில் கிடைக்கின்றது.

ஜூன் 13ந் தேதி விற்பனைக்கு வரவுள்ள ஸ்மார்ட்போன்களான  நோக்கியா 3, நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 போன்றவற்றின் நுட்ப விபரங்களை சுருக்கமாக இங்கே காணலாம்.

இந்தியாவில் நோக்கியா 3 , நோக்கியா 5 நோக்கியா 6 ஜூன் 13 முதல்

நோக்கியா 3

ரூ.9,999 விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற நோக்கியா 3 ஸ்மார்ட்போனில் 5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் திரையுடன் குவாட் கோர் மீடியாடெக் MTK 6737 எஸ்ஓசி பிராசஸர் பெற்று 2GB ரேம் உடன் 16GB வரையிலான சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128GB வரை விரிவாக்க இயலும்.

2650mAh பேட்டரி திறனால் இயக்கப்படுகின்ற நோக்கியா 3ல் முன் மற்றும் பின்புறத்தில் 8 மெகாபிக்சல் கேமரா ஆப்ஷனை பெற்று விளங்குகின்றது.

இந்தியாவில் நோக்கியா 3 , நோக்கியா 5 நோக்கியா 6 ஜூன் 13 முதல்

நோக்கியா 5

ரூ.13,999 விலையில் எதிர்பார்க்கப்படுகின்ற நோக்கியா 5 மொபைலில் 5.2 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் 720 பிக்சல் திரையுடன் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி பிராசஸர் பெற்று 2GB ரேம் உடன் 16GB வரையிலான சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128GB வரை விரிவாக்க இயலும்.

3000mAh பேட்டரி திறனால் இயக்கப்படுகின்ற நோக்கியா 5ல் முன்புறத்தில் 8 மற்றும் பின்புறத்தில் 13 மெகாபிக்சல் கேமராவை பெற்று விளங்குகின்றது.

நோக்கியா 6

நோக்கியாவில் விற்பனையில் உள்ள ஸ்மார்ட்போன்களில் டாப்மாடலாக உள்ள நோக்கியா 6 விலை ரூ.16,999 தொடங்கலாம். இதில் 5.5 இஞ்ச் ஹெச்டி ஐபிஎஸ் திரையுடன் ஸ்னாப்டிராகன் 430 எஸ்ஓசி பிராசஸர் பெற்று 4GB ரேம் உடன் 64GB வரையிலான சேமிப்பினை பெற்று விளங்குகின்றது. கூடுதலாக மைக்ரோஎஸ்டி அட்டை வழியாக 128GB வரை விரிவாக்க இயலும்.

இந்தியாவில் நோக்கியா 3 , நோக்கியா 5 நோக்கியா 6 ஜூன் 13 முதல்

நீக்க இயலாத 3000mAh பேட்டரி திறனால் இயக்கப்படுகின்ற நோக்கியா 6ல் முன்புறத்தில் 8 மற்றும் பின்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமராவை பெற்று விளங்குகின்றது.

பிரசத்தி பெற்ற செங்கல் செட் நோக்கியா 3310 ப்யூச்சர் போனும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து , இந்தியாவில் நோக்கியா 3 , நோக்கியா 5 மற்றும் நோக்கியா 6 என மூன்று ஸ்மார்ட்போன்களும் ஆஃப்லைன் மற்றும் ஆன்லைன் என இரண்டிலும் கிடைக்கலாம்.

நோக்கியா மொபைல்கள் விலை
  • நோக்கியா 3 ரூ.9,999
  • நோக்கியா 5 ரூ.13,999
  • நோக்கியா 6 ரூ.16,999

மூன்று ஸ்மார்ட்போன்களுமே ஆண்ட்ராய்டு 7.0 இயங்குதளத்தில் வரவுள்ளது. மேலும் சில நாடுகளில் தற்பொழுது ஆண்ட்ராய்டு ஓ பீட்டா தள மேம்பாடு வழங்க தொடங்கியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here