இந்தியாவில் பிரபலமான நோக்கியா 3310 (2017) மொபைல் ரூபாய் 3310 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 விதமான நிறங்களில் ஆஃப்லைனில் மட்டுமே விற்பனைக்கு கிடைக்கும்.

நோக்கியா 3310 விலை

புதிய நோக்கியா 3310 (2017) மொபைலில்  84 × 48 pixel மோனோக்ரோம் டிஸ்பிளேவுடன் முந்தைய மாடலின் அதே தாத்பரியங்களை கொண்டே வடிவமைக்கப்பட்டுள்ளது.

2.4 அங்குல வண்ண திரையுடன் 240 x 320 பிக்சல் அளவுடன் பிக்சல் அடர்த்தி 167ppi பெற்று விளங்குகின்றது. புதிதாக எத்தனை ஆண்ட்ராய்டு கேம் நீங்கள் விளையாடினாலும் முதல் முறையாக நோக்கியா 3310 கருவியில் கேம் விளையாடியிருந்தால் என்றும் உங்கள் நினைவில் இருக்கின்ற ஸ்னேக் கேம் மீண்டும் கலர்ஃபுல்லான திரையில் இனி விளையாடலாம்.