2000 ஆம் ஆண்டில் விற்பனைக்கு வந்த நோக்கியா 3310 மொபைலுக்கும் தற்பொழுது விற்பனைக்கு வந்த 2017 புதிய நோக்கியா 3310 மொபைலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன ? மேலும் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள நோக்கியா 3310 வசதிகள் என்ன ?

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310

2000 ஆம் ஆண்டு விற்பனைக்கு வந்த நோக்கியா3310 மொபைல் பல்வேறு நாடுகளில் சுமார் 126 மில்லியன் மொபைல்கள் விற்பனை செய்யப்பட்டு அதிரடியை சாதனையை பதிவு செய்திருந்த நிலையில் புதிய நோக்கியாவின் 3310 மாடலுக்கும் பழைய மாடலுக்கும் உள்ள மிக முக்கியான வித்தியாசங்களை காணலாம்.

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

  • டிசைன்

முந்தைய தலைமுறை மாடலை போல அல்லாமல் நவீன தலைமுறைக்கு ஏற்ற புத்தம் புதிய ரவுன்ட் எட்ஜ் கொண்ட டிசைனுடன் அற்புதமாக வந்துள்ள மாடலில் முந்தைய மாடலை போன்ற பட்டன்கள் பெற்று நேர்த்தியாக அமைந்துள்ளது.

பழைய நோக்கியா மொபைல் எடை 133கிராம் ஆனால் புதிய நோக்கியா 3310 எடை வெறும் 79.6 கிராம் மட்டுமே..! செங்கல் செட் எடை குறைக்கப்பட்டாலும் தற்பொழுது பல்வேறு சிறப்பம்சங்களை பெற்றதாக கலர்ஃபுல்லாக விளங்குகின்றது. பழைய தோற்றத்தில் பெரிய மாற்றம் இல்லாமல் அடிப்படை மாடலாகவே அமைந்திருப்பது நல்லதொரு அம்சமாகும்.

  • ஸ்கீரின்

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

2000த்தில் வந்த நோக்கியா 3310 மொபைல் 1.5 அங்குல திரையுடன் கருப்பு வெள்ளை மோனோக்ரோம் நிறத்தில் விளங்கி மாடல் தற்பொழுது 2.4 அங்குல திரையை பெற்றுள்ளது.

தொடக்கநிலை ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன்களை போன்றே 240 x 320 பிக்சல் தீர்மானத்துடன் கலர்ஃபுல்லாக விளங்குகின்றது. 84 x 48 பிக்சல் தீர்மானத்தை மட்டுமே பழைய நோக்கியா பெற்றிருந்தது.

  • ஸ்னேக் கேம்

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

முந்தைய பழைய நோக்கியா3310 ஃப்யூச்சர் மொபைலில் அமைந்திருந்த உலக புகழ்பெற்ற ஸ்னேக் கேம் மீண்டும் வண்ண திரையுடன் கேம்லோஃப்ட் மேம்பாடுடன் வந்துள்ள புதிய ஸ்னேக் கேம் நிச்சியமாக கலரில் விளையாடும்பொழுது புது விதமான அனுபவத்துடன் அமைந்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பழைய மொபைலில் அமைந்துள்ள கருப்பு புள்ளி போன்ற உணவு தற்பொழுது உணவை போன்றே கலரில் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

மற்றபடி முந்தைய 3310 ஸ்னேக் கேம் அம்சங்களையே கொண்டிருப்பதாகவும் கூடுதலாகவும் சில வசதிகளை பெற்றதாக அமைந்திருக்கின்றதாம்.

  • பேட்டரி

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

பழைய நோக்கியா 3310 மொபைல் சிறப்பான பேட்டரி பேக்கப் பெற்றதாக 900mAh பெற்றிருந்த நிலையில் 11 நாட்கள் ஸ்டேன்ட் பை டைமுடன் சராசரியாக 2 முதல் 3 நாட்களுக்கு பல்வேறு பயன்பாட்டிற்கு ஏற்றதாக அமைந்திருந்தது.

புதிய நோக்கியா 3310 மொபைல் பேட்டரியில் பெரிய மாற்றமாக 1200mAh திறனுடன் 31 நாட்கள் ஸ்டேன்ட் பை டைமுடன் 22 மணி நேர தொடர்ந்து பேசும் வகையிலான திறனை பெற்றிருக்கும்.

பழைய பெரிய பின் சார்ஜருக்கு மாற்றாக யூஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டு அதன் வாயிலாக சார்ஜ் செய்து கொள்ளலாம்.

  • மெம்மரி

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

நோக்கியா3310 மொபைலில் 8 வந்த அழைப்புகள் , 8 தவறவிட்ட அழைப்புகள் மற்றும் 8 டயல் செய்த அழைப்புகளுடன் சில குறுஞ்செய்திகளை சேமிக்கும் வகையில் அமைந்திருந்தது.

தற்பொழுது வந்துள்ள புதிய நோக்கியா3310 மொபைலில் 16MB உள்ளடங்கிய சேமிப்பு திறனுடன் விளங்குகின்றது. மேலும் கூடுதலாக 32ஜிபி வரையிலான மைக்ரோ எஸ்டி கார்டை இணைத்துக்கொள்ளும் வகையில் அமைந்திருக்கின்றது. யூஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளதால் அதன் உதவியுடன் படங்கள் , பாடல்கள் போன்றவற்றை பதிவேற்றி கொள்ள இயலும்.

  • கேமரா

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

17 ஆண்டுகளுக்கு முன்பு மொபைலில் கேமரா என்றால் எப்படி என யோசிக்கும் நிலையிருந்த காலத்தில் வந்த நோக்கியா 3310 போனில் தற்பொழுது புதிய பிறவி எடுத்துள்ள மொபைலில் 2 மெகாபிக்சல் கேமரா பெற்று விளங்குகின்றது.

கேமரா மட்டுமல்லாமல் எல்இடிஃபிளாஷ் அமைந்திருப்பது பாரட்டப்பட வேண்டிய அம்சமாகும். நிச்சியாக நோக்கியா3310 மொபைல் கேமரா படங்கள் என சமூக வலைதளங்களில் வலம் வரும் காட்சிகள் விரைவில் அரங்கேறும் காத்திருங்கள்..

  • ஹெட்போன் ஜாக்

தற்பொழுது சந்தையில் கிடைக்கின்ற உயர்ரக ஸ்மார்ட்போன்களில் இடம்பெறுகின்ற 3.5mm ஆடியோ ஹெட்போன் ஜாக் 2017 நோக்கியாவின் 3310 மொபைலில் அமைந்திருக்கின்றது. பழைய நோக்கியா மொபைலில் அவ்வாறு எந்த வசதியும் இடம்பெறவில்லை.

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

  • இணையம்

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

பழைய நோக்கியாவின் 3310 மொபைலில் இணையம் என்றால் என்ன ? என்று கேட்டவர்கள் புதிதாக சந்தைக்கு வரவுள்ள 3310 மொபைல் இணையத்தை பயன்படுத்தலாம். 2.5 ஜி நெட்வெர்க் சேவைகளில் வழியாக இணையத்தை பெறலாம். ஒப்ரா பிரவுசர் வாயிலாக மிதமான 2ஜி வேகத்தில் பேஸ்புக் , டிவிட்டர் , மின்னஞ்சல் மேலும் பல சேவைகளை பயன்படுத்தலாம்.

நோக்கியா 3310 மொபைலில் வைஃபை போன் வசதிகள் இல்லையென்றாலும் பூளூடுத் 3.0 அமைப்பினை பெற்றிருக்கும்.

  • சாஃப்ட்வேர்

பழைய நோக்கியா மொபைல் 3310வில் இடம்பெற்றிருந்த ஆப்ரேட்டிங் சிஸ்டமே தற்பொழுது நவீன காலத்துக்கு ஏற்ப புதுப்பிக்கப்பட்டு S30+ சிஸ்டத்தை பெற்று விளங்குகின்றது. பண்பலை ரேடியோ , ம்யூசிக் பிளேயர் போன்றவை இடம்பெற்றுள்ளது.

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

  • நோக்கியா 3310 விலை

புதிய நோக்கியா கலர்ஃபுல்லான திரையுடன் , கேமரா ,மெம்மரி , புதிய ஸ்னேக் கேம் , பேட்டரி , அதிகரிக்கப்பட்ட ஸ்கீரின் போன்றவற்றை பெற்று விளங்குகின்றது.

இந்தியாவில் புதிய நோக்கியா3310 விற்பனைக்கு வந்துள்ளது.. இந்தியாவில் நோக்கியா 3310 விலை ரூ.3310 மட்டுமே.. மே 18 முதல் விற்பனைக்கு கிடைக்கும்.

புதிய நோக்கியா 3310 Vs பழைய நோக்கியா 3310 – வித்தியாசங்கள் என்ன ?

இந்த பதிவு பிடிச்சிருந்தா கமென்ட் பன்னுங்க.. உங்கள் செங்கல் செட் போன் நினவுகளையும் கீழே உள்ள பேஸ்புக் கமென்ட் பாக்சில் பதிவுபன்னங்க ……..!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here