வரும் ஆகஸ்ட் 16ந் தேதி வரவுள்ள இரட்டை கேமரா பெற்ற நோக்கியா 8 மொபைல் போன் படங்கள் மற்றும் முக்கிய விபரங்கள் இணையத்தில் கசிந்துள்ளது.

நோக்கியா 8 மொபைல் போன் ஆகஸ்ட் 16 முதல்

நோக்கியா 8 மொபைல்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் வாயிலாக களமிறங்கிய நோக்கியா மொபைல் போன் நிறுவனம் நோக்கியா 3, நோக்கியா 5, நோக்கியா 6 போன்றவற்றுடன் நோக்கியா 3310 உள்ளிட்ட ஃபீச்சர் போன்களை வெளியிட்டுள்ள நிலையில் அடுத்த ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக நோக்கியா 8 ரூ. 44,000 விலையில் விற்பனைக்கு வரக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த கைப்பேசி 5.3 அங்குல QHD திரையுடன் கூடிய ஸ்னாப்டிராகன் 835 பிராசஸர் பெற்று 4ஜிபி அல்லது 6ஜிபி ரேம் பெற்ற மாடலாக இருப்பதுடன் 64ஜிபி வரையிலான உள்ளடங்கிய மெமரி வசதியுடன் கூடுதலாக 256ஜிபி மெமரி கார்டு பயன்படுத்தும் ஆப்ஷன் வழங்கப்பட்டிருக்கும்.

நோக்கியா 8 மொபைல் போன் ஆகஸ்ட் 16 முதல்

ஹெச்எம்டி  ZEISS ஆப்டிக்ஸ் நிறுவனத்துடன் கேமரா துறைக்கு என கூட்டணி அமைத்துள்ளதாபின்ல் கேமரா பிரிவில் முன் மற்றும் பின்புறங்களில் 13 மெகாபிக்சல் கேமரா பெற்றிருப்பதுடன் பின்புறத்தில் டூயல் கேமரா செட்டப் எல்இடி ஃபிளாஷ் போன்றவற்றுடன் வரலாம்.

நோக்கியா 8 மொபைல் போன் ஆகஸ்ட் 16 முதல்

வை-ஃபை, 4ஜி வோல்ட்இ, 3.5mm ஆடியோ ஜாக், உள்ளிட்ட வசதிகளுடன் பேட்டரி பற்றி எந்த தகவலும் வெளியாகவில்லை. நோக்கியா 8 பேட்டரி குவால்காம் ஃபாஸ்ட்சார்ஜிங் நுட்பத்தை கொண்டதாக இருக்க வாய்ப்புகள் உள்ளது.

நோக்கியாவின் அதிகார்வப்பூர்வ இணையத்திலும் வெளிவந்த படம் இதோ…

நோக்கியா 8 மொபைல் போன் ஆகஸ்ட் 16 முதல்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here