இந்தியாவில் நோக்கியா லேப்டாப் அறிமுகம் எப்போது ?

நோக்கியா நிறுவனத்தின் மொபைல், டிவி போன்றவற்றை தொடர்ந்து லேப்டாப் அறிமுகம் அடுத்த சில வாரங்களுக்குள் மேற்கொள்ளப்பட வாய்ப்புள்ளதாக தெரியவந்துள்ளது. குறிப்பாக இந்தியாவில் முதற்கட்டமாக வெளியிட பி.ஐ.எஸ் மூலம் அனுமதி பெற்றுள்ளது.

2009 ஆம் ஆண்டு நோக்கியா நிறுவனம் வெளியிட்டிருந்த 3ஜி ஆதரவுடன் கூடிய Nokia Booklet 3G மினி லேப்டாப் விண்டோஸ் 7 இயங்குதளம் செயல்படுகின்றது. ovi வரைபடம் உள்ளிட்ட ஆதரவுடன் 3ஜி சிம் கார்டு பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டிருந்தது.

நவம்பர் 27 ஆம் தேதி இந்தியாவின் தர சான்றிதழ் வழங்கும் பி.ஐ.எஸ் மூலமாக NKi510UL82S, NKi510UL85S, NKi510UL165S, NKi510UL810S, NKi510UL1610S, NKi310UL41S, NKi310UL42S, NKi310UL82S, மற்றும் NKi310UL85S என 9 விதமான வேரியண்டுகளுக்கு அனுமதி பெற்றுள்ளது. NK என்பது நோக்கியா என்பதனை குறிப்பதுடன் i5 அல்லது i3 என்பது இன்டெல் கோர் பிராசெஸரையும் 10 என்பது விண்டோஸ் 10 இயங்குதளத்தை குறிக்கின்றது.

இந்தியாவில் பல்வேறு சீன நிறுவனங்கள் லேப்டாப் விற்பனைக்கு வெளியிட்டு வரும் நிலையில், தற்போது நோக்கியா பிராண்டில் வரவிருக்கும் லேப்டாப்கள் Tongfang Limited in China என்ற நிறுவனத்தால் அனுமதி பெற்றுள்ளது.