நோக்கியா பவர் இயர்பட்ஸ் மற்றும் போர்டெபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம்

ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் புதிதாக ஆடியோ பொருட்கள் சார்ந்த நோக்கியா பவர் இயர்பட்ஸ் மற்றும் போர்டெபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் என இரண்டையும் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

சமீபத்தில் நோக்கியா ஸ்மார்ட்போன் வரிசையில் நோக்கியா 3.4 மற்றும் நோக்கியா 2.4 என இரு மாடல்களும் விற்பனைக்கு ஐரோப்பா சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் செப்டம்பர் இறுதி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் விற்பனைக்கு கிடைக்கும்.

நோக்கியா பவர் இயர்பட்ஸ் லைட்

நோக்கியா வெளியிட்டுள்ள பவர் இயர்பட்ஸ் லைட் 35 மணி நேர ஆடியோ பிளேபேக் ஆதரவுடன், மிக நேர்த்தியான வடிவமைப்பினைக் கொண்டு இலகுவாக அழைப்புகளை ஏற்க்கவும் அல்லது தவிர்க்கவும் உதவுகின்றது. IPX7 சான்றிதழ் பெற்றுள்ளதால் 1 மீட்டர் நீரில் மூழ்கினால் 30 நிமிடம் வரை வாட்டர் ப்ரூஃப் திறனை கொண்டுள்ளது. மேலும் மழை மற்றும் வியர்வையால் எந்த பாதிப்பும் ஏற்படாது என குறிப்பிடப்பட்டுள்ளது.

வெள்ளை மற்றும் மின்ட் நிறத்தில் கிடைக்கின்ற பவர் இயர்பட்ஸ் லைட் இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.6,811 (EUR 79) ஆக அமையக்கூடும்.

நோக்கியா போர்டெபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர்

இலகுவாக எடுத்துச் செல்லும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள வயர்லெஸ் ஸ்பீக்கர் ப்ளூடூத் 5.0 ஆதரவை கொண்டுள்ளதால் நோக்கியா மட்டுமல்லாமல் அனைத்து பிராண்டுகளுடன் இணைக்கலாம். இரண்டு ஸ்பீக்கர்கள் வழங்கப்படுவதுடன் 800 mAh பேட்டரியுடன் 4 மணி நேரம் பிளேபேக் ஆதரவினை கொண்டிருக்கும்.

இந்திய மதிப்பில் தோராயமாக ரூ.2,999 (EUR 34.9) ஆக அமையக்கூடும்.

நோக்கியா பவர் இயர்பட்ஸ் மற்றும் போர்டெபிள் வயர்லெஸ் ஸ்பீக்கர் அறிமுகம்