ரூ.59,990 விலையில் நோக்கியா PureBook X14 லேப்டாப் விற்பனைக்கு வெளியானது

இந்திய சந்தையில் நோக்கியா நிறுவனத்தின் முதல் லேப்டாப் மாடலாக PureBook X14 வெளியிடப்பட்டு ரூ.59,990 ஆக விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது. இன்டெல் i5 பிராசெஸருடன் , டால்பி ஆடாம்ஸ் பெற்று மிகவும் எடை குறைவான 1.1 கிலோ கிராம் மட்டுமே பெற்றுள்ளது.

14 ″ முழு எச்டி திரை கொண்ட 4.8 மிமீ பிசெல்களுடட் 86 சதவீத ஸ்கிரீன்-டூ-பாடி விகிதத்தை கொண்டுள்ளது. இது தீவிர தெளிவான காட்சி திரைக்கு டால்பி விஷன் மூலம் இயக்கப்படுகிறது. இன்டெல் i5 10-வது தலைமுறை குவாட் கோர் பிராசெஸருடன் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி  NVMe SSD, 1.1 கிலோ எடையுடன் 16.8 மிமீ தட்டையாக அமைந்துள்ளது.

நோக்கியா ப்யூர்புக் எக்ஸ்14 ஹெட்ஃபோன்களுக்கான டால்பி அட்மோஸையும் கொண்டுள்ளது, விண்டோஸ் 10 ஹோம் உடன் விண்டோஸ் ஹலோ ஃபேஸ் அன்லாக் கொண்ட HD IR வெப்கேம், சரிசெய்யக்கூடிய பிரகாசத்துடன் பேக்லிட் விசைப்பலகை மற்றும் பல சைகை விருப்பங்களுடன் துல்லியமான டச்பேட் ஆகியவற்றைக் கொண்டுள்ளது.

இது இரண்டு USB 3.1 போர்ட்கள், ஒரு யூ.எஸ்.பி 2.0 போர்ட் மற்றும் ஒரு யூ.எஸ்.பி-சி போர்ட், எச்டிஎம்ஐ போர்ட், ஈதர்நெட் (RJ45) போர்ட் மற்றும் லேப்டாப்பில் 3.5 மிமீ ஆடியோ ஜாக் ஆகியவற்றுடன் 2.4GHz மற்றும் 5GHz இரண்டு விதமான வை-ஃபை மற்றும் புளூடூத் v5.1 ஆதரவுடன் வந்துள்ளது. 46.7Wh பேட்டரியுடன் வந்துள்ள நோக்கியா ப்யூர்புக் எக்ஸ் 14 லேப்டாப் மாடல் 8 மணி நேரம் தாக்குபிடிக்கும் திறனை பெற்றுள்ளது.