வானா கிரை எனும் ரேன்சம்வேர் தாக்குதலால் 100 க்கு மேற்பட்ட நாடுகளில் 3 லட்சத்துக்கு மேற்பட்ட கனிணிகள் பாதிப்படைந்த நிலையில் வானாகிரை தாக்குதலின் பின்னணியாக வடகொரியா இருக்கலாம் என பிரிட்டன் பாதுகாப்பு சேவைகள் அமைப்பு தெரிவித்துள்ளது.

வானாகிரை தாக்குதலின் பின்னணியில் வடகொரியா

வானாகிரை

வானாகிரை என்றால் ரேன்சம்வேர் வகையை அடிப்பையாக கொண்ட இந்த தீம்பொருள் கனிணிகளை மின்னஞ்சல் வாயிலாக ஊடுருவி கனிணி தகவலை என்கிரிப்ட் செய்வதுடன் குறிப்பிட்ட அளவு பணத்தை செலுத்தானால் மட்டுமே கணினியை விடுவிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட தீம்பொருளாகும்.

இந்த தாக்குதலில் பிரிட்டன் நாட்டின் தேசிய சுகாதார சேவை உள்பட பல்வேறு முன்னணி கார்ப்ரேட் நிறுவனங்கள் உள்பட இந்தியாவில் ஆந்திரா, மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களின் காவல்துறை என 150க்கு மேற்பட நாடுகளில் 3 லட்சம் கனிணிகள் பாதிப்படைந்தது.

வானாகிரை தாக்குதலின் பின்னணியில் வடகொரியா

இந்த தாக்குதலுக்கு பின்னணியாக வட கொரியாவைச் சேர்ந்த லாசர்ஸ் என்ற ஹேக்கர்கள் இருக்கலாம் என அறியப்பட்ட நிலையில் ,மீண்டும் இதனை உறுதி செய்யும் வகையில் பிபிசி செய்திக்கு பிரிட்டன் பாதுகாப்பு சேவைகள் வழங்கி உள்ள செய்தி குறிப்பில் இந்த தாக்குதலின் பின்னணி வடகொரியாவாக இருக்கலாம் என உறுதியாக நம்புவதாக தெரிவித்துள்ளது.

இந்த லாசர்ஸ் ஹேக்கர் குழு பல்வேறு வகையான மிகப்பெரிய தாக்குதிலில் ஈடுபட்டு வந்த குழுவாகும். இதற்கு முன்பாக சோனி பிக்சர்ஸ் நிறுவனத்தை 2014-ல் ஹேக் செய்து  தி இன்டிரிவியூ என்ற படத்தை வெளியிடும் சமயத்தில் கோடிகணக்கான பணத்தை கேட்டுள்ளது. வானாகிரை ரேன்சம்வேர் தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட இனைப்பு டீப்லிங்க் எனப்படும் மிக கடுமையான இனைப்பாக உள்ளதால் அதனை கண்டறிவது மிக சிக்கலாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here