பேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும்  நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்

ஒரு இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர் உள்பட ஆராய்ச்சியாளர்கள் கொண்டு குழு ஒன்று ஒரு புதிய மொபைல் அப்ளிகேஷனை உருவாக்கியுள்ளனர். இந்த அப்ளிகேஷன், பேட்டரி பயன்பாட்டை குறைத்து, பேட்டரி சார்ஜ்-ஐ அதிகரிக்க உதவுதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 200 ஸ்மார்ட்போன்களில் டவுன்லோடு செய்யப்பட்டு இந்த ஆப் சோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த சோதனையின் முடிவில், இந்த ஆப் பயன்படுத்துவதால், 10 முதல் 25 சதவிகிதம் பேட்டரி பவர் அதிகரிக்கும் என்று தெரிய வந்துள்ளது.

பேட்டரி லைப்-ஐ அதிகரிக்கும்  நாவல் ஸ்மார்ட்போன் அப்ளிகேஷன்

இதுகுறித்து பேசிய கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான கிஷிராசாகர் நாயக், மல்ட்டி விண்டோ வசதிகளுடன், ஆண்டிராய்டு ஆபரேடிங் சிஸ்டமில் இயக்கும் வகையில் இந்த ஆப் உருவாகப்பட்டுள்ளது. இந்த ஆப் மூலம் ஸ்மார்ட் போனின் பிரைட்னஸ் கூட குறைக்கலாம். தினமும் இரவில் போனை சார்ஜ் போட்டு, காலை பயன்படுத்துகிறோம் இந்த நேரத்தில் போன் சார்ஜ் ஆகுவதுடன், பல தகவல் பரிமாற்றங்களும் உள்ளே நடைபெறுகிறது. அதிகளவிலான ஆற்றல் பயன்பாட்டால், போன்கள் ஹீட் ஆகின்றன. தொடர்ந்து சார்ஜ் செய்வது ஸ்மார்ட்போனின் ஆயுளை குறைக்கும். இதனால் மூன்று ஆண்டு பயன்படுத்தப்படும் பேட்டரிகள், இரண்டு ஆண்டுகளிலேயே மாற்ற வேண்டிய நிலை ஏற்படலாம்” என்றார்.