இந்திய சந்தையில் எம் வரிசையின் மூன்றாவது மாடலாக நுபியா எம்2 ப்ளே ரூ.8,999 விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது. அமேசான் இணையதளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

ரூ.8,999 விலையில் நுபியா எம்2 ப்ளே விற்பனைக்கு அறிமுகம்

நுபியா எம்2 ப்ளே

3000mAh பேட்டரி திறன் பெற்ற கருவியாக வந்துள்ள மெட்டல் பாடியுடன் கைரேகை சென்சாருடன் எம்2 பிளே அம்சான் வலைதளத்தில் விரைவில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

டிசைன் & டிஸ்பிளே

5.5 அங்குல ஹெச்டி திரையுடன் 720×1280 பிக்சல் தீர்மானத்துடன் கூடிய எம்2 பிளே மெட்டல் பாடியுடன் கூடியதாக வந்துள்ளது. வளைந்த கிளாஸ் பாதுகாப்புடன் மிக கைரேகை சென்சார் கீழே வழங்கப்பட்டுள்ளது.

பிராசஸர் & ரேம்

ஆக்டோ-கோர் ஸ்னாப்டிராகன் 435 பிராசஸருடன் கூடிய எம்2 பிளே 3ஜிபி ரேம் பெற்றிருப்பதுடன் 32ஜிபி உள்ளடங்கிய சேமிப்பு வசதியுடன், 128GB வரை நீட்டிக்கும் வகையில் மைக்ரோஎஸ்டி அட்டைக்கான ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

ரூ.8,999 விலையில் நுபியா எம்2 ப்ளே விற்பனைக்கு அறிமுகம்

கேமரா துறை

ஹைபிரிட் ஆட்டோ ஃபோகஸ், எல்இடி ஃபிளாஷ் ,f/2.2  ஆகியவற்றுடன் கூடிய 13 மெகாபிக்சல் சென்சார் கேமரா பிரைமரி இணைக்கப்பட்டுள்ளது.

முன்புறத்தில் வீடியோ அழைப்புகள் மற்றும் செல்பி படங்களுக்கு  f/2.4 , 84 டிகிரி வைட்-ஏங்கிள் ஆகியவற்றை கொண்டதாக 8 மெகாபிக்சல் சென்சார் வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

3000mAh பேட்டரி திறன் பெற்ற இந்த மொபைலில் நியோ பவர் 2.5 நுட்பத்தை பெற்றுள்ளதால் சிறப்பான பேட்டரி திறனை கொண்டிருக்கும்.

மற்றவை

ஜிபிஎஸ், வைபை 801.11, ப்ளூடூத் 4.1, 4ஜி வோல்ட், யுஎஸ்பி டைப்-சி 2.0, என்எப்சி, 3.5mm ஆடியோ ஜாக் ஆகியவற்றை துனை விருப்பங்களாக பெற்றுள்ளது.

ரூ.8,999 விலையில் நுபியா எம்2 ப்ளே விற்பனைக்கு அறிமுகம்

விலை

ரூ.8,999 விலையில் நுபியா எம்2 ப்ளே ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here