பாதுகாப்பு காரணங்களுக்காக போனை அன்லாக் செய்யும் ‘ஓகே கூகுள்’ என குரல் மூலம் திறக்கும் வசதியை கூகுள் நிறுவனம் நீக்கியுள்ளது. இன்றைய உலகில் தனிப்பட்ட தகவல்களை ஸ்மார்ட்போனில் பாதுகாக்க மிகவும் சிரமத்தை சந்திக்கும் ஒரு நிகழ்வாக மாறிவிட்டது.
குரலை வைத்து போனை அன்லாக் செய்யும் முறையிலான வசதியை பாதுகாப்பு காரணங்களுக்காக மற்றவர்கள் குரலை மாற்றி அன்லாக் செய்ய வாய்ப்புள்ளதால் உடனடியாக நீக்க முடிவு செய்துள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. தற்போது வழங்கப்பட்டுள்ள மோட்டோ Z மற்றும் பிக்சல் XL ஆகிய போன்களில் இடம் பெற்றிருந்த குரலை வைத்து ஸ்மார்ட்போனை ஆன்லாக் செய்யும் முறையை, தற்போது வெளியான கூகுள் 9.27 மேம்பாடு மூலம் குரல் வழி லாக் செயல்பாட்டை இழந்துள்ளது.
கூகுள் கேலண்டர், ஜி மெயில் மற்றும் சில ஆப்களை தவிர ‘ஓகே கூகுள்’ பொதுவாக இனி செயல்படாது. மேலும் மற்ற ஆண்ட்ராய்ட் போன்களிலும் இந்த அன்லாக் செய்யும் வசதியும் நீக்கப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. விரைவில் வெளியாகவுள்ள கூகுள் பிக்சல் 3XL போனில் இந்த வசதி இடம்பெற்றிருக்காது.