ரூ.32,999 விலையில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு வந்தது..! முழுவிபரம்

இந்தியாவில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் ரூ.32,999 ஆரம்ப விலையில் 6ஜிபி ரேம் மாடல், ரூ.37,999 விலையில் 8ஜிபி ரேம் என இரு மாடல்களும் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ளது.

ஒன்ப்ளஸ் 5

மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஒன்ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் இந்தியாவில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு அமேசான் தளத்தில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

 

டிசைன் மற்றும் டிஸ்பிளே

ஏறக்குறைய ஆப்பிள் ஐபோன்7 பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலின் டிசைன் வடிவத்தை பெற்றதாகவே வந்துள்ள இந்த ஸ்மார்ட்போனில்  5.5 அங்குல முழு ஹெச்டி ஆப்டிக் AMOLED திரையுடன் 1920×1080 பிக்சல் தீர்மானத்துடன் வந்துள்ளது.

மிட்நைட் பிளாக் மற்றும் ஸ்லேட் கிரே என இருவண்ணங்களில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த மொபைல் மிகவும் தட்டையான மற்றும் சிறப்பான பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தக்கூடியதாக வந்துள்ளது.

பிராசஸர் மற்றும் ரேம்

தற்போது குவால்காம் வசமுள்ள மிக சிறப்பான உயர்ரக பெர்ஃபாமென்ஸ் வெளிப்படுத்தும் 2.45GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸருடன் கூடிய 6ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ரேம் என இரு வகையில் வழங்கப்பட்டுள்ளது.

6ஜிபி ரேம் பிரிவில் உள்ளடங்கிய சேமிப்பு 64ஜிபி மற்றும் 8ஜிபி ரேம் பிரிவில் உள்ளடங்கிய சேமிப்பு 128ஜிபி ஆகும்.

oneplus 5 மாடலில் மிக சிறப்பான செயல்திறன் கொண்டதாக விளங்கும் வகையில் கஸ்டமைஸ் செய்யப்பட்ட இந்நிறுவனத்தின் சொந்தமான ஆக்ஸிஜன் ஓஎஸ் இயங்குதளம் ஆண்ட்ராய்டு நௌகட் 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டதாகும்.

கேமரா

பின்புறத்தில் வழங்கப்பட்டுள்ள இரட்டை கேமராக்களில் ஒன்று ஒன்று 16 மெகபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் கேமரா என இரண்டிலும் மிக சிறப்பான புகைப்படங்களை பெறும் வகையில் எல்இடி ஃபிளாஷ், ஆட்டோஃபோகஸ், போர்ட்ராயிட் மோட்,  வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் எதிர்கொள்ளும் வகையில் 16 மெகாபிக்சல் கேமராவில் எல்இடி ஃபிளாஷ் போன்றவை இடம்பெற்றுள்ளது.

பேட்டரி

ஒரு நாள் முழுமைக்கான சார்ஜிங் ஏறுவதற்கு அரை மணி நேரம் போதுமானதாக இருக்கும், என ஒன்பிளஸ் தெரிவிக்கின்றது. இதில் இடம்பெற்றுள்ள டேஸ் சார்ஜிங் நுட்பம் மிக விரைவான சார்ஜ் ஏறும் வகையிலான வசதியை வழங்குகின்றது. 3300mAh திறன் பெற்றுள்ள பேட்டரி கொண்டு ஒன்ப்ளஸ் 5 இயக்கப்படுகின்றது.

மற்றவை

4G, எல்டிஇ, 3G, வை-ஃபை, புளூடூத் 5.0, யூஎஸ்பி Type C, NFC மற்றும் ஜிபிஎஸ் போன்றவற்றுடன் பல்வேறு வசதிகளை பெற்றுள்ள இந்த ஸ்மார்ட்போனில் ஆப் பயன்பாட்டினை பொறுத்து அதனை விரைவாக வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.அதாவது அதிகம் பயன்பாடில்லாத ஆப்ஸ்களை நீக்க வழி வகுக்கின்றது. இதுதவிர பேடிஎம் க்வீக் பே, ரீடிங் மோட் என பலவற்றை பெற்றுள்ளது.

ஒன்ப்ளஸ் 5 மொபைல் விலை

ஒன்ப்ளஸ் 5 6GB ரேம் : ரூ.32,999

ஒன்ப்ளஸ் 5 6GB ரேம் : ரூ.37,999

எங்கே வாங்கலாம்

அமேசான் ஆன்லைன் தளத்தில் இன்று மாலை 4.30 மணிக்கு ஒன்பிளஸ் 5 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

மேலும் படிக்க ; ஒன் பிளஸ் 5 வாங்கலாமா ? வேண்டாமா ? 

ஒன்பிளஸ்5 Vs ஒன்பிளஸ் 3T ஒப்பீடு பார்வை

For the latest news, Mobile news, breaking news headlines and live updates checkout Gadgetstamilan.com

Recommended For You