சீனாவில் ஒன் ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் $479 (ரூ.30,969) விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்திய சந்தையில் ஒன் ப்ளஸ் 5 ஸ்மார்ட்போன் ஜூன் 22ந் தேதி விற்பனைக்கு வரவுள்ளது.
ஒன் ப்ளஸ் 5 மொபைல்
ஃபிளாக் ஷீப் கில்லர் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள ஒன் ப்ளஸ் 5 ஸ்மார்டபோன் மிக சவாலான விலையில் போட்டியாளர்களை கதி கலங்க வைத்துள்ள கில்லாராக வெளியிடப்பட்டுள்ள ஒன்பிளஸ்5 மொபைலின் முழு விபரத்தை இங்கே காணலாம்.
1281 நாட்களில் தயாரிக்கப்பட்ட ஒன்பிளஸ் 5 நுட்ப விபரங்கள் இதோ..!
டிசைன் & டிஸ்பிளே
மிக நேர்த்தியாக சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ள ஒன்ப்ளஸ் 5 மொபைல் மிகவும் தட்டையாக அற்புதமாக வடிவத்துடன் வந்துள்ள மொபைலில் 5.5 அங்குல முழு ஹெச்டி திரையுடன் 1080p தீர்மானத்துடன் வந்துள்ளது.
பிராசஸர் மற்றும் ரேம்
2.45GHz குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 பிராசஸருடன் கூடிய 6ஜிபி ரேம் பெற்ற மாடலில் 64ஜிபி உள்ளடங்கிய மெமரி மற்றும் 8ஜிபி ரேம் பெற்ற மாடலில் 128ஜிபி வரையிலான உள்ளடங்கிய மெமரி வழங்கப்பட்டுள்ளது.
கேமரா
பிரைமரி கேமராவாக வழங்கப்பட்டுள்ள பின்புறத்தில் இரட்டை கேமராக்கள் வழங்கப்பட்டுள்ளது. ஒன்று 16 மெகபிக்சல் மற்றும் 20 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் கேமரா இடம்பெற்றுள்ளது.
பேட்டரி
3300mAh திறன் பெற்றுள்ள பேட்டரில் விரைவாக சார்ஜ் பெறும் வகையில் டேஸ் சார்ஜ் நுட்பத்தினை பெற்று விளங்குகின்றது.
மற்றவை
ஆண்ட்ராய்டு 7.1.1 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்ட ஆக்சிஜன் ஓஎஸ் , புளூடூத் 5.0, வை-ஃபை, 4ஜி வோல்ட்இ, போன்றவற்றை பெற்றுள்ளது.
விலை
ஒன் ப்ளஸ் 5 6ஜிபி : $479 (ரூ.30,969)
ஒன் ப்ளஸ் 5 8ஜிபி : $499 (ரூ.35,900)