ஒன்பிளஸ் 6T அறிமுக தேதியில் மாற்றம்

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட் போன்களை வரும் 30ம் தேதி அறிமுகம் செய்வதாக அறிவித்திருந்தது. இதே நாளில் ஆப்பிள் நிறுவனம் தனது புதிய தயாரிப்புகளை வெளியிட உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இதை தொடர்ந்து, ஒன்பிளஸ் நிறுவனம் ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட் போன்களின் அறிமுக தேதியை மாற்றியுள்ளது.

ஒன்பிளஸ் நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட் போன், ஒன்பிளஸ் 6T ஸ்மார்ட் போன்களை வரும் 30ம் தேதி நியூயார்க் மற்றும் நியூ டெல்லியில் ஒரே நேரத்தில் அறிமுகம் செய்ய உள்ளதாக கடந்த அக்டோபர் மாதம் 8ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு இருந்தது. இந்நிலையில், கடந்த வியாழக்கிழமை ஆப்பிள் நிறுவனம் வெளியிட்ட அழைப்பிதழில், புதிய ஐபேடு மற்றும் மேக் மாடல்களை, ஒன்பிளஸ் நிறுவனம் அறிவித்த அதே நாளில் நியூயார்க்கில் அறிமுகம் செய்ய உள்ளதாக குறிப்பிட்டு இருந்தது.

ஒன்பிளஸ் 6T அறிமுக தேதியில் மாற்றம்

இதை தொடர்ந்து தனது ஒன்பிளஸ் 6T அறிமுகம் தேதியில் மாற்றம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், இந்த போன்களின் அறிமுகம், 30ம் தேதிக்கு பதிலாக அக்டோபர் 29ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பால் இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போன் அறிமுகம் பாதிக்கப்படும் என்பதாக தெரிய வந்துள்ளது. இதை தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவன உயர் அதிகாரி தெரிவிக்கையில், ஒன்பிளஸ் 6T போன்கள் இந்தியாவில் ஏற்கவே முடிவு செய்யப்பட்ட அதே தேதியில் அதாவது அக்டோபர் 30ம் தேதி அன்று இரவு 8.30 மணிக்கு நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.