ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போன் சீரிஸ் எதிர்பார்ப்புகள்பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன் சீரிஸ் மாடலாக வெளியிடப்பட உள்ள ஒன்பிளஸ் நார்டு வரிசையில் 5ஜி ஆதரவுடன் கூடிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 765G சிப்செட் பெற்றிருக்கும் என்பது உறுதியாகியுள்ளது. இந்த சிப்செட்டில் உயர் ரக கேமரா ஆதரவினை கொண்டிருக்கும்.

ஒன்பிளஸ் நார்டு ஸ்மார்ட்போனில் குவால்காம் நிறுவனத்தின் 5ஜி ஆதரவை பெற்ற 765G சிப்செட் பெற்றிருப்பதனை குவால்காம் தனது ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளது. முதற்கட்டமாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவின் சில நாடுகளில் ப்ரீ புக்கிஃ நடைபெற்றுள்ள நிலையில், இந்தியாவிற்கான ப்ரீ புக்கிங் விபரம் விரைவில் வெளியாக உள்ளது.

முன்புறத்தில் டூயல் கேமரா ஆப்ஷன் பெற்றதாக இருக்கும் எனவே இதில் 32 எம்பி கேமரா உடன் கடுதலாக 8 எம்பி சென்சார் பெற்றிருக்கும். பின்புறத்தில் குவாட் கேமரா செட்டப் பெற்று 64 மெகாபிக்சல் பிரைமரி ஆப்ஷனை கொண்டிருக்கும்.

சமீபத்தில் அமேசான் இந்தியா இணையதளத்தில் பிரத்தியேக ஒன்பிளஸ் நார்டு மொபைலுக்கு என பிரத்தியேகமான பக்கம் கொண்டு வரப்பட்டுள்ளதால் விரைவில் ப்ரீ புக்கிங் தொடங்கப்பட வாய்ப்புள்ளது. அனேகமாக ஜூலை மாதம் 28 ஆம் தேதி விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிறுவனத்தால் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ள பட்ஜெட் விலை மாடல் அனேகமாக ரூ.30,000 விலையில் நார்டு வெளியாகலாம்.