ஹைதராபத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கிறது ஒன்பில்ஸ்

பிரிமியம் ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனமான ஒன்பில்ஸ் நிறுவனம், தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் ஒன்றை ஹைத்ராபாத்தில் தொடக்க உள்ளது என்று தெலுங்கானா அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், தங்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை ஹைதராபாத்தில் அமைக்க முடிவு செய்துள்ள ஒன்பிளஸ் நிறுவனம், அதற்கான இடம் தேர்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றார். இருந்தபோதும், எவ்வளவு முதலீட்டில் இந்த மையம் அமைய உள்ளது என்பது குறித்தும், இதன் மையம் அமைந்தால், எவ்வளவு புதிய வேலை வாய்ப்புகள் உருவாக்கும் என்பது குறித்து அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.

இந்த தகவல் குறித்து ஒன்பிளஸ் அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயன்ற போது அவர்கள் யாரையும் தொடர்பு கொள்ள முடியவில்லை என்று செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்நிலய்ல், தெலுங்கானா தொழிற்துறை மற்றும் ஐடி அமைச்சர் கே டி ராமா ராவ் தனது டுவிட்டர் பதிவில், ஒன்பிளஸ் நிறுவனத்தை வரவேற்பதாக குறிப்பிட்டுள்ளார்.

ஹைதராபத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கிறது ஒன்பில்ஸ்

கடந்த ஆண்டு இந்திய மார்க்கெட்டில் ஒன்பிளஸ் நிறுவனம், மூன்றில் ஒரு பங்கு வருவாய் ஈட்டியுள்ளது. இந்நிலையில், ஒன்பிளஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள டுவிட்டரில், ஹைதராபாத்தில் உள்ளூர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்க தேவையான ஏற்பாடுகளை செய்து வருகிறோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹைதராபத்தில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையம் அமைக்கிறது ஒன்பில்ஸ்

சமீபத்தில் இன்டெல் நிறுவன இந்தியா பிரிவு தலைவர், அமைச்சர் கே டி ராமா ராவ்வை சந்தித்து ஹைதராபத்தில் புதிய மையம் ஒன்றை துவக்க முடிவு செய்துள்ளது குறித்து விவாதித்துள்ளார். இந்த மையம் அமைப்பதன் மூலம், இந்திய ஐடி துறையை மேம்படுத்துவதுடன், துவக்கத்தில் 1,500 வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளோம் என்று இன்டெல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.