ஒன்பிளஸ் டிவி

சீனாவின் பிரசத்தி பெற்ற ஒன்பிளஸ் ஸ்மார்ட்போன் தயாரிப்பாளரின் பட்ஜெட் விலை ஸ்மார்ட் டிவி ஒன்பிளஸ் Y1 சீரிஸ் மற்றும் ஒன்பிளஸ் U1 சீரிஸ் என மொத்தமாக மூன்று விதமான தொலைக்காட்சியை அறிமுகம் செய்துள்ளது.

ஒன்பிளஸ் Y1 சீரிஸ்

குறைந்த விலை 32 அங்குல (1366 × 768 பிக்சல்) டிவி மற்றும் 42 அங்குல டிவி (1920 × 1080 பிக்சல்ஸ்) என இரண்டிலும் காமா என்ஜின் கொண்டு 64 பிட் பிராசெஸருடன் 1 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் பெற்று ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தினை பின்பற்றிய ஆக்ஸிஜன் பிளே கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கூடுதலாக வை-ஃபை 802.11 a / b / g / n, 2.4GHz, புளூடூத் 5.0 LE, 2x HDMI (HDMI1 ஆதரவு ARC), 2x USB, ஆப்டிகல், ஈத்தர்நெட் ,20W ஸ்பீக்கர் (2 x 10w முழு வீச்சு அலகுகள்), டால்பி ஆடியோ ஆகியவற்றை கொண்டுள்ளது.

ஒன்பிளஸ் U1 சீரிஸ்

இந்நிறுவனத்தின் உயர் ரக 55 அங்குல டிவி (3840 x 2160 பிக்சல்ஸ்) 4கே எல்இடி டிஸ்பிளே, டால்பி டிஸ்பிளே உடன் ,HDR10,HDR10+,HLG போன்றவற்றுடன் காமா என்ஜின் கொண்டு 64 பிட் பிராசெஸருடன் 1 ஜிபி ரேம் மற்றும் 8ஜிபி ஸ்டோரேஜ் பெற்று ஆண்ட்ராய்டு 9.0 இயங்குதளத்தினை பின்பற்றிய ஆக்ஸிஜன் பிளே கொண்டு இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

வைஃபை 802.11 a / b / g / n (2.4 GHz / 5 GHz), புளூடூத் 5.0 LE, 3x HDMI (HDMI1 ஆதரவு ARC), 2x USB (1 x USB 2.0, 1 x USB3.0), ஆப்டிகல், ஈத்தர்நெட், 30W ஸ்பீக்கர் (4 யூனிட்டு, 2x ஹை ஃபிரிக்யூன்சி மற்றும் 2x ஃபுல் ஃபிரிக்யூன்சி), டிடிஎஸ் எச்டி டால்பி ஆடாம்ஸ், டால்பி டிஜிட்டல் பிளஸ் போன்வற்றை பெற்றுள்ளது.

பொதுவாக ஒன்பிளஸ் டிவிகளில் யூடியூப், பிரைம் வீடியோ, ஈரோஸ் நவ், ஹங்காமா, ஜியோ சினிமா, ஜீ5 உள்ளிட்ட சர்வதேச மற்றும் உள்ளூர் நிகழ்ச்சிகள் வழங்குநர்களுடன் ஒன்பிளஸ் ப்ளே இயங்கும் திறனை பெற்றுள்ளது.

மேலும் மொபைல் கொண்டே இந்த டிவியை இயக்கலாம், ஆப்பிள் பயனர்களுக்கு பிரத்தியேக ஆப் கிடைக்கும். டேட்டா சேமிப்பு மற்றும் குழந்தைகளுக்கான உள்ளடக்கம் அடுத்த OTA புதுப்பிப்பில் கிடைக்கும்.

ஒன்பிளஸ் டிவி விலை எவ்வளவு ?

ஒன்பிளஸ் Y1 32 அங்குல டிவி – ரூ.12,999

ஒன்பிளஸ் Y1 43 அங்குல டிவி – ரூ.22,999

ஒன்பிளஸ் U1 55 அங்குல டிவி – ரூ.49,999

தற்போது அமேசான் இந்தியா இணையதளத்தில் முன்புதிவு துவங்கப்பட்டுள்ள இந்நிறுவன தொலைக்காட்சிகளின் விற்பனை ஜூலை 5 ஆம் தேதி முதல் துவங்க உள்ளது. இந்தியாவின் மேக் இன் இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக தயாரிக்கப்பட்டுள்ளது.