உலகையே அலறவைத்து கொண்டிருக்கும் வானா க்ரை ரான்சம்வேர் தாக்குதல் அடுத்தகட்டமாக இந்திய ஏஎடிஎம்களை தாக்கலாம் என்ற நிலையும் ஏற்பட்டுள்ளதால் புதிய அப்டேட் செய்ய ஆர்பிஐ கட்டளை பிறப்பித்துள்ளாதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

வானா க்ரை தாக்குதல்

சர்வதேச அளவில் 150 நாடுகளில் 2லட்சத்துக்கு மேற்பட்ட கம்ப்யூட்டர்களை வானா க்ரை தாக்கியுள்ள நிலையில், மேலும் தாக்குதல் தொடர்ந்து வருகின்ற நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் பாதுகாப்பு சார்ந்த பேட்ச் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உள்ள 2.25 லட்சம் ஏடிஎம் மையங்களில் 60 சதவிகித மையங்கள் மைக்ரோசாப்ட் கைவிட கோரிய விண்டோஸ் XP இயங்குதளத்தை கொண்டு செயல்படுவதனால் இவற்றை மேம்டுத்த வேண்டிய கட்டாயத்தில் வங்கிகள் உள்ளன.

இந்தியாவில் ஆந்திரா மற்றும் மஹாராஷ்டிரா போலீஸ் கணினிகள் பாதிக்கப்பட்டிருப்பதுடன் , ரெனோ-நிசான் என 102 கம்ப்யூட்டர்கள் அதிகபட்சமாக பாதிக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது. மேலும் தென் இந்தியாவில் இரு வங்கிகளில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டாலும் அதனை ஆர்பிஐ உறுதிப்படுத்தவில்லை. ஏடிஎம்களில் முழுமையான மேம்பாடு வழங்கப்பட பிறகே திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணினியை பாதுகாக்க இந்த சாப்ட்வேர் அப்டேட் செய்ய மைக்ரோசாப்ட் பணித்துள்ளது.

இணைப்பு முகவரி ;- https://blogs.technet.microsoft.com/msrc/2017/05/12/customer-guidance-for-wannacrypt-attacks/