ஓப்ரா பிரவுசரில் இலவச VPN

பிரபலமான ஓப்ரா பிரவுசர் தனது ஆண்ட்ராய்டு மொபைல்களுக்கான ஒப்ரா மொபைல் பிரவுசரில் இலவச விபிஎன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. VPN எனப்படுவது தமிழில் மெய்நிகர் தனியார் பிணையம் என அழைக்கப்படுகின்றது.

உங்களுடைய இருப்பிடத்தை மற்றவர்கள் டிராக்கிங் செய்வதனை தடுக்க இன்-பில்ட் முறையில் விபிஎன் சேவையை ஆண்ட்ராய்டு ஓப்ரா 51 பதிப்பில் வெளியிடப்பட்டுள்ளது. இது முன்பாக டெஸ்க்டாப் முறையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

ஓப்ரா இலவச VPN

மெய்நிகர் தனியார் பிணையம் (VPN) என்றால் என்ன ? இணையத்தின் பின்னணியில் உங்களின் தகவல்களை டிராக்கிங் செய்யும் முறை ஆகும். ஓப்ராவில் வழங்கப்பட்டுள்ள VPN இலவசமானது மற்றும் இது உலாவியின் மேல் இடது மூலையில் இருந்து எளிதில் செயல்படுத்த முடியும் வகையில் இடைமுகத்தை பெற்றுள்ளது. இந்த VPN சேவையகங்கள் பயனரின் தனியுரிமையைப் பாதுகாக்க, எந்த செயல்பாட்டுத் தரவையும் பதிவு செய்யாது மற்றும் டிராக்கிங் செய்ய இயலாது வகையில் உள்ளது.

இதுதவிர பல்வேறு செயல்திறன் சார்ந்த மேம்பாடுகளை வழங்க வல்லதாக புதிய பதிப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது.