Oppo K3 Smartphone
Oppo K3 Smartphone

ஆன்லைனில் மட்டும் விற்பனை செய்யப்பட உள்ள ஒப்போ கே சீரிஸ் வரிசையில், ஒப்போ K3 மொபைல் ரூ.16,990 ஆரம்ப விலை மாடல் 6GB ரேம் மற்றும் 64GB ஸ்டோரேஜ் கொண்டதாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஒப்போ கே3 தொலைபேசி பாப்-அப் செல்பி கேமரா, இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார், குவால்காம் ஸ்னாப்டிராகன் 710  உட்பட 20W VOOC 3.0 வேகமான சார்ஜிங்கிற்கான ஆதரவுடன் 3,765mAh பேட்டரி பெற்றதாக உள்ள இந்த ஸ்மார்ட்போன் அமேசான் இந்தியாவில் இரண்டு கிரேடியன்ட் வண்ணத்தில் கிடைக்கும்.

ஒப்போ K3 மொபைல் 6.5 அங்குல AMOLED ஃபுல் ஹெச்டி டிஸ்பிளேவுடன் 2340 × 1080 பிக்சல்கள் தீர்மானம் கொண்டுள்ளது. முன்புறத்தில் 16 மெகாபிக்சல் மோட்டார் பொருத்தப்பட்ட பாப்-அப் செல்பி கேமரா கொண்டதாக அமைந்துள்ளது. பிரைமரி ஆப்ஷனில்  இரட்டை கேமரா செட்டப் பெற்று 16 மெகாபிக்சல் மற்றும் 2 மெகாபிக்சல் டெப்த் சென்சாருடன் வரவுள்ளது.

ஒப்போ கே3 குவால்காம் ஸ்னாப்டிராகன் 710 SoC மூலம் இயக்கப்பட்டு 6ஜிபி ரேம் மறும் 8 ஜிபி ரேம் ஆப்ஷனை பெற்று ஆண்ட்ராய்டு 9 இயங்குதளத்தில் செயல்படுகின்றது. இதில் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டு 6 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட 8 ஜிபி ரேம் மாடல் என இரு வகைகளில் கிடைக்க உள்ளது.

20W VOOC 3.0 வேகமான சார்ஜிங் ஆதரவுடன் கூடிய 3,765mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிற ஒப்போ K3 போனில் வைஃபை, புளூடூத், ஜி.பி.எஸ், 4 ஜி எல்டிஇ மற்றும் யூ.எஸ்.பி டைப்-சி போர்ட் போன்றவற்றை பெற்றுள்ளது.

ஒப்போ K3 மொபைலின்  6 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் வேரியண்டிற்கு விலை ரூ .16,990 எனவும், 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட மாடல் ரூ .19,990 என நிர்ணயம் செய்யப்படுள்ளது. ஜூலை 23, மதியம் 12:00 மணி முதல் அமேசான் இந்தியாவில் இருந்து ஒப்போ கே3 மொபைல் விற்பனை தொடங்க உள்ளது.

அறிமுக சலுகையாக, ஒப்போ கே3 வாங்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் அமேசான் கேஷ்பேக் ரூ .1000 வழங்கப்பட உள்ளது. மேலும், ஆக்சிஸ் வங்கி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு பயனர்களுக்கு கூடுதலாக ரூ .1,000 உடனடி தள்ளுபடி சலுகை மற்றும் ஜியோ டிஜிட்டல் லைஃப் நிறுவனத்திடமிருந்து ரூ .7,050 மதிப்புள்ள சலுகையும், லென்ஸ்கார்ட்டிலிருந்து ரூ .5,000 மதிப்புள்ள வவுச்சர்களும், ஓயோ ரூம்களுக்கு ரூ .12,000 மதிப்புள்ள சலுகைகளை இந்நிறுவனம் வழங்குகின்றது.