ஆர்க்குட் நிறுவனரின் புதிய ஹலோ சமூக வலைதளம் இந்தியாவில் அறிமுகம்

ஆர்க்குட் சமூக வலைதளத்தை உருவாக்கிய கூகுள் நிறுவனத்தின் முன்னாள் பணியாளர் ஆர்க்குட் பய்யோக்கோக்டென் (Orkut Buyukkokten) என்பவரால் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள சமூக வலைதளமான ஹலோ இந்தியாவில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது.

ஹலோ

மிகவும் பிரபலமாக விளங்கிய சமூக வலைதளங்களில் ஒன்றான ஆர்க்குட் வலைதளத்தை உருவாக்கியவரின் முயற்சியில் மொபைல் தலைமுறையினரை இணைக்கும் நோக்கில் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

நேர்மறை, அர்த்தமுள்ள, உண்மையான தொடர்புகள் மற்றும் தொடர்ச்சியான சமூக தொடர்பினை  உருவாக்க, தங்கள் நலன்களைச் சுற்றி மக்களை ஒன்றாக இணைக்கும் நோக்கில் ஹலோ ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக , ஹலோ நிறுவன அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஹலோ சமூகதளம் நிகழ்கால உலகில் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த செயலி வாயிலாக மீண்டும் ஒருமுறை இந்தியவிற்கு ஹலோ சொல்வதாக, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி குறிப்பிட்டுள்ளார்.

தற்போது பிரேசில் நாட்டில் மட்டும் சுமார் 10 லட்சம் பயனாளர்களை பெற்றுள்ள ஹலோ இந்தியா சந்தையிலும் மிகவும் சிறப்பான ஆதரவை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஹலோ .காம் என்ற பெயரில் கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஸ்டோரில் கிடைக்க தொடங்கியுள்ளது. ஆர்க்குட் பிரிவை கூகுள் செப்டம்பர் 2014 யில் மூடியது.