ottomate smartphone launched

இந்தியாவின் ஸ்மார்ட் ஃபேன் தயாரிப்பு நிறுவனமான ஓட்டோமேட் இண்டர்நேஷனல், ரூபாய் 3,999 விலையில் ஸ்மார்ட் இல்லங்களுக்கான ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேனை வெளியிட்டுள்ளது. சீலிங் ஃபேன் மாடலாக வெளியிடப்பட்டுள்ள இந்த ஃபேனில் ப்ளூடூத் 5.0 மெஸ் ஆதரவுடன் மொபைல் ஆப் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

ஓட்டோமேட் ஸ்மார்ட் ஃபேன்

ஃபோலி டிசைன்ஸ் நிறுவனத்தால் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த ஃபேனில் ஸ்மார்ட் ஹோம்- களுக்கு ஏற்ற முறையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மூன்று அல்லது நான்கு பிளேடுகள் என இரு ஆப்ஷன்களை வெளியிட்டுள்ளது.

குவால்காம் BLE 5.0 ஆதரவை பெற்றதாக அமைந்துள்ள இந்த ஃபேனில் மொபைல் ஆப் மூலம் கட்டுப்படுத்தவும், டிஜிட்டல் முறையில் அறையின் வெப்பத்தை கண்கானித்து அதற்கு ஏற்ப தானியங்கி முறையில் ஃபேன் இயங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்காக ப்ரீஸ் மோட், டர்போ மோட்,  ஓட்டோ மோட் மற்றும் மாஸ்டர் ஸ்விட்சு என நான்கு மோட்கள் வழங்கப்பட்டுள்ளது.

ஓட்டோ மோட் மூலம் ஃபேன் அறையின் வெப்பத்தை கண்கானித்து அதற்க்கேற்ப ஃபேனின் வேகத்தை தன்னாலே அதிகரித்துக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. பீரிஸ் மோட் மூலம் மிதிமான காற்று வழங்கும், டர்போ மோட் சாதாரன மோடுகளை விட 10 சதவீத வேகத்தை அதிகரிக்க இயலும். மாஸ்டர் ஸ்விட்ச் மூலம் ஃபேனை ஆஃப் மற்றும் ஆன் செய்யலாம்.

ஓட்டோமேட் நிறுவனம், 100க்கு அதிகமான சேவை மையங்களை இந்தியாவில் கொண்டுள்ளது. ஸ்மார்ட்ஃபேன் இன்ஸ்டால் செய்வது மற்றும் டெமோ போன்றவற்றை இலவசமாக வழங்குகின்றது.