பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் ரூ.6290/- அறிமுகம்4ஜி வோல்ட் ஆதரவுடன் கூடிய பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் ரூபாய் 6290 விலையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 1ஜிபி ரேம் கொண்ட மாடலாக பானாசோனிக் P9 விற்பனைக்கு கிடைக்க உள்ளது.

பானாசோனிக் பி9

நாடு முழுவதும் உள்ள பானாசோனிக் ஸ்டோர்கள் மற்றும் முன்னணி ரீடெயில் ஸ்டோர்களில் விற்பனைக்கு கிடைக்க உள்ளது. இரு விதமான நிறங்களுடன் 4ஜி வோல்ட்இ ஆதரவை பெற்றதாக கிடைக்கும்.

டிசைன் & டிஸ்பிளே

கருப்பு மற்றும் கோல்டு ஆகிய நிறங்களுடன் கிடைக்க உள்ள பானாசோனிக் பி9 மொபைல் 5 அங்குல FWVGA திரையுடன் 480×854 பிக்சல் தீர்மானத்துடன் கூடியதாக கிடைக்கின்றது.

பிராசஸர் & ரேம்

1.1GHz குவாட்கோர் மீடியாடெக் MT6737M பிராசஸருடன் கூடிய 1ஜிபி ரேம் பெற்றதாக 16GB உள்ளடங்கிய மெம்மரி உடன் 32ஜிபி மைக்ரோ எஸ்டி அட்டை ஸ்லாட் வழங்கப்பட்டுள்ளது.

பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் ரூ.6290/- அறிமுகம்

கேமரா துறை

பின்புறத்தில் கேமரா பிரிவில்  f/2.0 உடன் 8  மெகாபிக்சல் சென்சார் வழங்கப்ட்டுள்ளது. முன்புறத்தில் செல்பி மற்றும் வீடியோ அழைப்புகளுக்கு 5 மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.

பேட்டரி

ஆண்ட்ராய்டு 7.0 நௌகட்  கொண்டு இயக்கப்படுகின்ற இந்த மொபைல் 2210mAh பேட்டரி பெற்றுள்ளது.

மற்றவை

4ஜி வோல்ட், இரட்டை-சிம், வைபை 802.11, ப்ளூடூத் 4.0, ஒடிஜி, மைக்ரோ யுஎஸ்பி போன்ற இணைப்பு ஆதரவுகள் பெற்றுள்ளது.

விலை

ரூ.6290 க்கு பானாசோனிக் P9 ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கின்றது.பானாசோனிக் பி9 ஸ்மார்ட்போன் ரூ.6290/- அறிமுகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here